‘பிரபல செல்ஃபோன் ஆப்பில்’.. ‘பக்’ பிரச்சனை.. அதிர்ச்சியில் பயனாளர்கள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

செல்ஃபோன் அழைப்புகளை ட்ராக் செய்ய உதவும் ட்ரூகாலர் செயலியில் பக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ட்ரூகாலர் என்பது தெரியாத எண்களிலிருந்து செல்ஃபோன்களுக்கு வரும் அழைப்புகளைத் தெரிந்துகொள்ளவும், தேவையில்லாத ஃபோன்கால்களை ப்ளாக் செய்யவும் உதவும் செயலி ஆகும். இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்திவரும் இந்த செயலியில் பக் இருப்பதாகத் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரூகாலரில் சம்பந்தப்பட்ட பயனாளர்களின் அனுமதியில்லாமல் ஐசிஐசிஐ வங்கியில் யுபிஐ கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ட்ரூ காலர் வெர்ஷன் 10.41.6 அப்டேட்டில் இந்த பிரச்சனை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பயனாளர்கள் பலரும் இந்த செயலியை அன் இன்ஸ்டால் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ட்ரூகாலர் நிறுவனம் சார்பில், “சிரமத்துக்கு மன்னிக்கவும். வர இருக்கும் புதிய வெர்சனில் இந்த பக் பிரச்சனை சரி செய்யப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஐசிஐசிஐ சார்பில் இதுதொடர்பாக அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

TRUECALLER, SMARTPHONE, APPLICATION, UPI, ICICIBANK, BUG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்