‘லுங்கி கட்டிட்டு லாரி ஓட்டிய டிரைவர்’.. ‘மடக்கி பிடித்து அபராதம் விதித்த போலீஸ்’.. மிரள வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

லுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டிய டிரைவருக்கு 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் செப்டம்பர் 1 -ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலை விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஹரியானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 10 ஆயிரம், 25 ஆயிரம் என அபராதங்கள் விதிக்கப்பட்ட செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் லுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டிய டிரைவருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த லக்னோ போக்குவரத்து காவல் அதிகாரி பூர்நெண்டு சிங், ‘ஆடை ஒழுங்கு சட்டம் 1989 ஆம் ஆண்டில் இருந்தே உள்ளது. இதற்கான அபராதம் 500 ரூபாய். இது 2019 -ம் ஆண்டு சட்டத்திருத்ததின் படி 2000 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களை ஓட்டும் அனைவருக்கும் இது கட்டாயம். ஆனால் இதுவரை கடுமையாக பின்பற்றப்படாமல் இருந்தது. கனரக ஓட்டுநர்கள் சட்டப்படி பேண்ட், சர்ட் மற்றும் ஷூ அணிந்திருக்க வேண்டும். இது பள்ளி வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கும் பொருந்தும்’ என டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.

POLICE, TRAFFICRULES, TRAFFICFINE, LORRY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்