குணமடைந்த ‘கடைசி’ நபர்.. இப்போ நாங்க கொரோனா ‘இல்லாத’ மாநிலம்.. அறிவித்த மாநில அரசு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா சிகிச்சை பெற்று வந்த இருவரும் குணமடைந்த நிலையில் கொரோனோ இல்லாதா மாநிலமாக திரிபுரா மாறியுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை 21 ஆயிரத்துக்கு 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 325 பேர் குணமடைந்துள்ளனர். 686 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ள்னர்.

இதற்கிடையில் திரிபுரா மாநிலத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இருவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பிப்லாப் குமார் டேப் தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கடந்த 6ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நபரும் நேற்று குணமடைந்துள்ளார். இதனால் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக தற்போது திரிபுரா ஆகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பிப்லாப் குமார் டேப் தெரிவித்துள்ளார். ஆனாலும் குணமடைந்த இரு நபர்களையும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்