Mahua Moitra : கண்ணில் கூலர்ஸ்.. புடவையோடு ஃபுட்பால் ஆடிய மஹுவா மொய்த்ரா! செம்ம Vibe-ஆன பெண்கள்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகழ்பெற்ற கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. இந்த கட்சியைச் சேர்ந்தவர் மஹூவா மொய்த்ரா.
Also Read | முப்பெரும் விழாவாக சென்னையில் நடக்கும் திருநங்கைகளுக்கான ‘மிஸ் சென்னை 2022’ போட்டி.!
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் நாடாளுமன்றத் தொகுதியின் (எம்.பி) உறுப்பினரான இவர் மிகவும் பிரபலம். அவ்வப்போது இவர் பேசும் பேச்சும், செய்யும் செயல்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆவதை காண முடியும். அப்படித்தான் இவர் நாடாளுமன்றத்தில் பேசும் பேச்சும் அனல் பறக்கும். அநேகமான இவரது புகைப்படங்களை தமிழக பெண் எம்.பிகளுடன் சேர்ந்து பார்க்க முடியும்.
அந்த அளவுக்கு நாடாளுமன்ற அவைகளில் இவர், தமக்கே உரிய அசரவைக்கும் பேச்சால் அனைவரது கவனத்தையும் பெற்றவர். அத்துடன் ஸ்டைலான மற்றும் கான்ஃபிடண்ட்டான இவரது நடை, உடை நிறைய பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்திருப்பதாக பல பெண்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில்தான், இவரது தொகுதியில் கிருஷ்ணாநகர் எம்.பி கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியைத் தொடங்கி வைத்த மஹுவா மொய்த்ரா, போட்டியை தொடங்கி வைத்த கையோடு, களத்தில் இறங்கி ஃபுட்பால் விளையாண்டுள்ளார். அதுவும், அணிந்த புடவை மற்றும் கூலிங் கிளாஸூடன்.. ஆம், சேலையுடன் இவர் ஆடிய கால்பந்து போட்டிதான் கடந்த ஓரிரு நாட்களாக இளம் பெண்களின் வைப்க்கு இன்னொரு இனிப்பான காரணம் என்று சொல்லலாம். சும்மா சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் கொண்ட புடவையைக் கட்டிக்கொண்டு இவர், கண்ணில் கூலிங்கிளாஸ் மாட்டிக்கொண்டு, களத்தில் இறங்கியுள்ளார்.
காலில் ஃபுட்பால் விளையாடுவதற்கேற்ற ஷூ மாட்டிக்கொண்டு ஓடி ஓடி பந்தை உதைத்து எகிற வைக்கவும், கோல் கீப்பராக பந்தை பிடிக்கவும் செய்துள்ளார். இவர் கால்பந்து விளையாடும் புகைப்படத்தை இவர் தமது சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து, இந்த புகைப்படங்களும் இவரது செயலும் வைரலாகி வருகிறது. இது தொடர்பான தமது பதிவில், “கிருஷ்ணாநகர் எம்.பி கோப்பைத் தொடரின் ஃபினாலே போட்டியின் விளையாட்டான தருணம். ஆம், நான் புடவை கட்டிக்கொண்டு விளையாடியுள்ளேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read | மனைவியுடன் மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்ட அறிவிப்பு.. வாழ்த்து மழை பொழியும் நெட்டிசன்கள்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்