'கையில துப்பாக்கி...' கெத்தா போஸ் கொடுக்கும் இவங்க 'யாரு'ன்னு தெரியுதா...? - வைரலான 'ஃபோட்டோ'வினால் வெடிக்கும் சர்ச்சை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திரிணமூல் காங்கிரஸ் மகளிர் பிரிவைச்சேர்ந்த மிருணாளினி அரசு அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

திரிணமூல் காங்கிரஸ் மகளிர் பிரிவைச்சேர்ந்தவர் மிருணாளினி மண்டல் மைதி. இவர் தற்போது மேற்கு வங்கத்தில் மால்டா மாவட்டத்தில் உள்ள டிஎம்சியின் மகிளா மண்டலின் மூத்த தலைவராக இருக்கும் மிருணாளினி மண்டல் மைதி பழைய மால்டா பஞ்சாயத்து சமிதியின் உள்ளூர் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

இந்நிலையில் நேற்று காலை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த மிருணாளினி மண்டல் மைதி தன்னுடைய அலுவலக அறைக்கு வந்து அமர்ந்துள்ளார். அப்போது தனது பையில் இருந்த துப்பாக்கியை ஸ்டைலாக எடுத்து போனில் செல்பி எடுத்துள்ளார்.

கையில் துப்பாக்கியுடன் அதிகாரியை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து தங்கள் கேமராக்களில் பதிவு செய்துள்ளனர். இப்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறிதுநேரத்தில் அவர்கள் இப்படத்தை வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவுடன் அலுவலகத்திற்குள் தானியங்கி கைத்துப்பாக்கியை வைத்திருக்கும் படம் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள், ''மிருணாளினி மண்டல் மைதி செய்தது மிகவும் தவறான செயல். அதிகாரப்பூர்வ நாற்காலியில் அமர்ந்து துப்பாக்கியுடன் விளையாட முடியாது. இது உண்மையான துப்பாக்கியா அல்லது பொம்மை துப்பாக்கியா என போலீசார் விசாரணை நடத்துவார்கள்.'' என்று கூறியுள்ளனர். மேலும், அவர் மீது எழுப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பலமுறை பதில் பெறுவதற்கு முயற்சித்தும் மைதியை தொடர்புகொள்ள இயலவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மைதி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

TRINAMOOL CONGRESS, GUN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்