காதலியோடு அறை எடுத்து தங்கியிருந்த கணவன்.. ஹோட்டலுக்கு போன் போட்ட மனைவி.. ஊழியர்கள் சொன்ன தகவலை கேட்டு உச்சக்கட்ட அதிர்ச்சி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓட்டலில் வேறொரு பெண்ணுடன் தங்குவதற்கு கணவன் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அடையாள அட்டை

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இயங்கும் விடுதி ஒன்றில் 41 வயதுடைய நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் தன்னுடைய கள்ளக்காதலியுடன் தங்க விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளார். பொதுவாக எல்லா ஓட்டலிலும் அடையாள அட்டை காட்டப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

அதேப்போல் இவரிடமும் உடன்வந்த அந்த பெண்ணிடமும் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். இருவரும் ஓட்டல் நிர்வாகத்திடம் தங்கள் அட்டையை கொடுத்துள்ளனர். ஆனால், இங்கு தான் ஒரு குளறுபடியை நிகழ்த்தியுள்ளார் அந்த நபர். தன்னுடன் வந்த பெண்ணின் அடையாள அட்டையை கொடுக்காமல் தன் மனைவியின் அடையாள அட்டையை கொடுத்துள்ளார் அந்த நபர்.

என்னை ஏமாற்றுகிறார்:

இந்த சம்பவம் குறித்து அவரின் மனைவியே காவல் நிலையத்தில் புகார் அளித்தது தான் மிக பெரிய டிவிஸ்ட். தன் கணவர் தன்னை ஏமாற்றுகிறார் என உணர்ந்த பாதிக்கப்பட்ட மனைவி தன் கணவரின் காரில் ஜிபிஎஸ் கருவியை பொறுத்தியுள்ளார். அதனை வைத்து தன் கணவர் தங்கிய ஓட்டலுக்கு போன் செய்து கேட்டபோது தான் ஓட்டல் அறை தன்னுடைய பெயரில் புக் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக காவல் நிலையம் சென்ற அந்த பெண் தன் கணவர் தன்னை ஏமாற்றுவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

காரில் ஜிபிஎஸ் டிராக்கர்:

இதுகுறித்து காவல் அலுவலர் ஒருவர் கூறும் போது, 'கடந்தாண்டு நவம்பரில், வணிகப் பயணத்திற்காக பெங்களூருக்கு சென்றிருப்பதாக கணவர் மனைவியிடம் கூறியுள்ளார். கணவர் மீது சந்தேகப்பட்ட அந்த பெண் தனது கணவரின் எஸ்யூவி காரில் ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தியிருந்துள்ளார். இதன் மூலம் தன் கணவர் இருக்கும் இடத்தைச் சரிபார்த்து, கார் புனேவில் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு:

மனைவி ஹோட்டலை தொடர்பு கொண்டபோது, ​​​​அந்த நபர் தனது மனைவியுடன் விடுதியில் தங்கியிருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அதோடு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, மனைவியின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் ஹோட்டலுக்குச் சென்றது தெரியவந்தது' எனக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தப்பி ஓடிய கணவர் மற்றும் அவரது காதலி மீது இந்திய குற்றப் பிரிவு 419 (ஏமாற்றுதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

HUSBAND, GIRL, MAHARASHTRA, HOTEL, மகாராஷ்டிரா, கணவன், மனைவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்