'போலீஸாயிட்டேன்.. என் சகோதரனுக்கு சமர்ப்பிக்கிறேன்'.. நெகிழவைத்த மதுவின் சகோதரி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாள் உணவைத் திருடியதாகக் கூறி அகாலியைச் சேர்ந்த இளைஞர்களால் குரூரமாகத் தாக்கப்பட்டு இறந்த பழங்குடி இளைஞர் மது.
பாலக்காட்டின் வனக்குகைகளில் வசித்து வந்த மது, கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்டும் கேரளாவைச் சேர்ந்த 16 இளைஞர்களால் அடித்தேக் கொல்லப்பட்ட உருக்குலைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியானதை அடுத்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் மதுவின் பிரேத பரிசோதனைக்காக, ஆய்வகத்தின் வாசலில் காவலர் தேர்ச்சி பெற்ற ஆர்டர் காப்பியோடு நின்றுகொண்டிருந்த மதுவின் சகோதரி சந்திரிகா, அந்த துக்கத்துடனேயே அன்று நடைபெற்ற காவலர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்றார். தேர்ச்சியும் பெற்றார். அவருடன் இன்னும் 24 பெண்கள் இந்த பணியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தற்போது கேரளாவில் காவல் பணியில் அமர்த்தப்பட்டுள்ள சந்திரிகா, தனது வேலையை தனது சகோதரன் மதுவுக்கு சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார். கேரள பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் நிகழ்ந்த இந்தத் தேர்வில் வெற்றி பெற்று காவலர் பணியில் சேர்ந்துள்ள சந்திரிகாவை கேரள காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கவுரவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பெண்ணின் கருப்பைக்குள்'...'பைக்கின் கைப்பிடி துண்டு'...'கொடூர கணவனின்'... அதிர வைக்கும் செயல்!
- ஹெட் ஆபீஸ்னு பொய் சொல்லி, 1 வருஷமா ஓசில சாப்பிட்ட மாணவர்?.. கேஎஃப்சியின் வைரல் ட்வீட்!
- ரூ.23 லட்சம் மதிப்புள்ள வைரநகைகள் கொள்ளை.. அரசுப்பேருந்தில், 'காத்திருந்து கைவரிசை'!
- 'தந்தையின் பல வருஷ விருப்பம்'.. திருமண நாளன்று நிறைவேற்றிய மணமகள்.. நெகிழவைக்கும் நிகழ்வு!
- 'ஹலோ.. போலீஸா? தனியா இருக்கேன்.. பய்ம்மா இருக்குது..' வைரலான சிறுவன் செய்த காரியம்!
- நள்ளிரவில் ஆபத்தில் இருந்த தமிழ்ப்பெண்.. சைரனை அலறவிட்டு காப்பாற்றிய கேரள ஆம்புலன்ஸ் டிரைவர்!
- 'ஏம்மா அது கிட்ட போய் இதெல்லாம் ட்ரை பண்லாமா ?' பதறுதுல்ல.. வைரல் வீடியோ!
- 'சிக்னல் காட்டுது.. ஆனா சிக்கல'.. தனிப்படை போலீசுக்கே டஃப் கொடுக்கும் இளம்பெண்!
- ‘விமான வீல்களில் சிக்கிய ஊழியருக்கு நேர்ந்த கதி’.. சோகத்தில் மூழ்கிய கேரள குடும்பம்!
- 'தேசிய அளவில் முதலிடம் பிடித்த கேரள மாணவி.. 2-ஆம் இடத்தில் சென்னை மாணவர்’.. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்!