’எய்ம்ஸ்’ மருத்துவரின் ’சூப்பர் ஐடியா...’ ’கண்ணுக்கு’ தெரியாத ’வைரசைக் கொல்ல...’ இப்படி 'ஒரு வழி' இருப்பது 'தெரியாமல் போச்சே..'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 'ரேடியேஷன் ஆன்காலஜி' எனப்படும் கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் மையம் அமைந்துள்ளது. இந்தத் துறையின் தலைவர் டாக்டர் டி.என்.ஷர்மா கொரோனா நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறையை பரிந்துரைத்ததன் பேரில், 50 வயதுக்கும் அதிகமான இரண்டு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு கதிர்வீச்சு மூலம் கடந்த 13ம் தேதி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவர்களுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்த அதிக அளவிலான கதிர்வீச்சுகள் பயன்படுத்தப்படும். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு குறைந்த அளவிலான கதிர்வீச்சுகளே போதும் என அவர் குறிப்பிடுகிறார். இந்த மொத்த சிகிச்சை நடைமுறைக்கும் 15 முதல் 20 நிமிடங்களே தேவைப்படும். இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
1940 ஆண்டுவரை நிமோனியா நோய்க்கான நோய் எதிர்ப்பு புரதங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நேரத்தில் கதிர்வீச்சு மூலம் அதன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த நடைமுறையையே தற்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் முதற்கட்ட ஆராய்ச்சியில் மேலும் எட்டு கொரோனா நோயாளிகளுக்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கவுள்ளதாக ஷர்மா தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை பலனளிக்கும் பட்சத்தில் இந்த ஆராய்ச்சி திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்!? குமறும் ஊழியர்கள்!.. முழு விவரம் உள்ளே
- 'சென்னை', கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள்ல... இருந்து 'எங்க' மாநிலத்துக்கு யாரும் வராதீங்க!
- கொரோனாவுக்கு 'பலியான' முதல் 'காவலர்'! 'சென்னையில்' 47 வயது காவல் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!
- சென்னையில் இன்று மட்டும் 1,276 பேருக்கு கொரோனா!.. ராமநாதபுரத்தில் மேலும் 51 பேருக்கு தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- ஊருக்கே இந்த 'வைரஸ்' ஆப்பு அடிச்சுதுல்ல... அத வச்சே அடுத்த 'ரவுண்டு' ஸ்டார்ட் பண்ணிருக்கேன்... பிரபலமாகும் கொரோனா 'பெட்டிகடை'!
- "முதல் முறையா ஒரே நாளில் 2000-ஐ தாண்டிய பாதிப்பு!".. தமிழகத்தில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா! இன்று மட்டும் 48 பேர் உயிரிழப்பு!
- '3 மாசமா சிங்கப்பூரில் தவிப்பு'... 'ஊருக்கு வந்ததும் அலப்பறை'... 'எனக்கு ஏசி ரூம் கொடுங்க'... வம்பு செய்ததால் பரபரப்பு!
- 'கொத்துக்கொத்தாக' விமானத்தில் பயணம் செய்து... 'வாழவைத்த' நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்... இவ்ளோ மோசமான நெலமையா?
- எங்களால முடியல... 35,000 பேரை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டம்... பிரபல நிறுவனத்தின் முடிவால் 'அதிர்ச்சியில்' ஊழியர்கள்!
- 'நீங்க லாக்டவுன் பண்ணுங்க... பண்ணாத போங்க!.. ஆனா எங்கள விட்டுருங்க!'.. உலக நாடுகளுக்கு 'குட் பை' சொன்ன அரசு!.. 2021 வரை "No entry"