'மோதலில் ஈடுபட்டதாக திருநங்கைகள் மீது கொடூரத் தாக்குதல்'... அதிர்ச்சி வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருநங்கைகளை, காவல்துறையினர் லத்தியால் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே லால் குர்தி காவல்நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருநங்கைகளின் 2 குழுக்களிடையே மீரட்டின் ஒரு பகுதியில் மோதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, போலீசுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், திருநங்கைகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் அவர்களை கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் காவல் நிலையத்திலும் திருநங்கைகள் இடையே மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் போலீஸ் தடியடி நடத்தியதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 'திருநங்கைகளின் இருகுழுக்களினிடையே ஏற்பட்ட மோதலை தடுப்பதற்காகவே காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.
அதற்கு அவர்கள் உடன்படாததால் தடியடி நடத்தப்பட்டதாக கூறினார். அதே நேரத்தில் தேவைக்கு அதிகமாக போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் அது குறித்து விசாரிக்கப்படும்' என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என் தங்கச்சியவா லவ் பண்ற?'... 'கத்தியால் குத்திய கும்பல்'... நடுரோட்டில் 'நெஞ்சை பதறவைத்த' சம்பவம்!
- 'பேருந்தில் இளம்பெண்களுக்கு நடந்த கொடூரம்'... 'முத்தமிடக்கோரி அடித்து உதைத்த கும்பல்'!
- 'கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த மனைவியால் பரபரப்பு'!
- 'மகளின் திருமணநிகழ்ச்சியில் உற்சாகமாக பாடிய எஸ்.ஐ.'... 'மேடையிலேயே மயங்கி விழுந்து பலியான சோகம்'!
- 'அறிவுரை கூறிய தாய்க்கு நேர்ந்த கொடூரம்'... 'ஆத்திரத்தில் பட்டதாரி இளைஞர் செய்த விபரீதம்'!
- 'சரமாரியாக தாக்கப்பட்ட தலைவர்'... 'அதிர வைத்த வீடியோ!'
- 'பிரியாணி கடையில் பெண்ணை கிண்டல் செய்த இளைஞர்'... 'தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்'!
- 'பைக்குக்கு வழிவிட சொன்ன மாணவர்களை கத்தியால் குத்திய தந்தை, மகன்'... பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்!
- 'ஃபேஸ்புக் லைவ் பண்ணனுமா'... 'அப்ப நீங்க இத எல்லாம் கடைப்பிடிக்கணும்!
- 'அமெரிக்காவிலிருந்து வந்த காதலி'... காதலனை 'காதலி'யே கடத்தியது அம்பலம்... 'அதிர்ச்சியூட்டும் காரணம்'!