‘நடுவழியில் விட்டுச்சென்ற ரயில் எஞ்சின்’ ‘பீதியில் உறைந்த பயணிகள்’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திரா மாநிலம் சென்றுகொண்டிருந்த விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்சின் நடுவழியிலேயே பிரிந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து ஆந்திராவில் உள்ள செகந்திராபாத்திற்கு விசாகா பயணிகள் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது ஆந்திர மாநிலத்தின் நர்சிபட்டணம் மற்றும் துனி ரயில் நிலையகங்களுக்கு இடையே ரயில் வந்து கொண்டிருந்த போது ரயிலின் எஞ்சின் மட்டும் தனியே பிரிந்து சென்றுள்ளது.

இதனை கவனிக்காத ஓட்டுநர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை எஞ்சினை மட்டும் ஓட்டி சென்றுள்ளார். ரயில் பெட்டிகள் அனைத்தும் பாதியிலேயே நின்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்து ரயில் ஓட்டுநருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து உடனே ரயில் ஓட்டுநர், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு மீண்டும் ரயில் பெட்டிகள் இருக்கும் இடத்துக்கு எஞ்சினை ஓட்டி வந்துள்ளார். இதனால் அந்த மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் சில மணிநேரம் தாமதமாக புறப்பட்டன. மேலும் சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ANDHRAPRADESH, VISAKHAEXPRESS, BHUBANESWAR, BOGIES, ENGINE, TRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்