சிக்னல் போட்டும் கிளம்பாமல் நின்ற ரயில்.. “என்ன டிரைவரை காணோம்?”.. கடைசியில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கிளம்பாமல் இருந்தது பின்னால் அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நாய், பூனையை செல்லப்பிராணியா வளர்த்து பார்த்திருப்போம்.. ஆனா இவங்க எதை வளர்க்குறாங்கன்னு பாருங்க.. ‘ஷாக்’ ஆன நெட்டிசன்கள்..!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தின் ஹசன்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. சமஸ்திபூரிலிருந்து சஹர்சா நோக்கி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் சென்றுகொண்டு இருந்துள்ளது. ஹசன்பூர் என்ற ரயில் நிலையத்தில் ரயில் நின்றுள்ளது. ஆனால் நீண்ட நேரமாக அங்கிருந்து ரயில் கிளம்பவில்லை. இதனால் பயணிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது.

ரயில் கிளம்புவதற்கான சிக்னல் கொடுத்தும் ரயில் நகராமல் நின்றுள்ளது. இதனால் நிலைய மாஸ்டர் இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போதுதான் ரயிலின் உதவி லோகோ பைலட் (ALP) கரண்வீர் யாதவ் என்ஜினில் இருந்து வெளியே சென்றது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து காணாமல் போன உதவி லோகோ பைலட்டை தேட ரயில்வே போலீசார் வரவழைக்கப்பட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மார்க்கெட் அருகே நிற்கக்கூட முடியாத அளவுக்கு கரண்வீர் யாதவ் போதையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கோட்ட ரயில்வே மேலாளர் அலோக் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ரயிலை நிறுத்தி உதவி லோகோ பைலட் டீ வாங்க சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் அதேபோல் மதுகுடிக்க ரயிலை நிறுத்திவிட்டு உதவி லோகோ பைலட் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

TRAIN, DRIVER, BIHAR, HASANPUR STATION, DRINK ALCOHOL, பீகார் மாநிலம், ஹசன்பூர் ரயில் நிலையம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்