கோவை- பெங்களூரு உதய் எக்ஸிபிரஸில் VCare நிறுவன பிராண்டிங் அறிமுகம்..!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தென்னிந்திய ரயில்வேயில், கடந்த பல ஆண்டுகளாக, ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிவி மற்றும் பலகைகள் மூலம் விளம்பரங்களை வெளியிட நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.  தற்போது, ​​ரயில் இன்ஜின், ரயில் பெட்டிகள், உட்புறம் மற்றும் வெளிப்புறம் போன்றவற்றில் விளம்பரங்களை வெளியிட, தென்னிந்திய ரயில்வே அனுமதித்துள்ளது.

Advertising
>
Advertising

இந்நிலையில் பிரபல வி கேர் நிறுவனத்தின் விபரங்கள் ரயிலின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. உதய் எக்ஸ்பிரஸ் எனும் இந்த டபுள் டெக்கர் ரயில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. இதில் வி கேர் நிறுவனம் சார்பில் வி கேர் நிறுவனத்தின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரபல விளம்பர நிறுவனங்களில் ஒன்றான சென்னை ரெட்மேப்பிள் குழுமமும், அதன் இணை நிறுவனமான கிச்சன் ஷெல்ஃப் நிறுவனமும் இந்தத் திட்டத்தை மேற்கொள்கின்றன. இந்த நிறுவனம் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு, சென்னை முதல் பெங்களூரு மற்றும் இன்டர்சிட்டி ரயில் பெட்டிகள் உட்பட பல்வேறு நிலைகளில் நிறுவனத்தை விளம்பரப்படுத்த ரயில்வேயிடம் அனுமதி பெற்றுள்ளது.

இதன் அறிமுக விழாவில் VCare நிறுவன உரிமையாளர் & நிர்வாக இயக்குநர் Dr. கரோலின் பிரபா ரெட்டி,  VCare நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர் முகுந்தன் சத்ய நாராயணன், கோவை டிவிஷன் ரயில்வே இயக்குநர் ராகேஷ் குமார் மீனா, ஸ்டேஷன் மேனேஜர் R.செந்தில்குமார், ஸ்டேஷன் மேனேஜர் F.லாரன்ஸ்,  முதன்மை கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் சந்தீப் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதுகுறித்து, வி கேர் நிர்வாக இயக்குனர் டாக்டர் கரோலின் பிரபா ரெட்டி பேசும்போது, “ஏழைகளின் விமானம் என அழைக்கப்படும் ரயில்கள், குறைந்த கட்டணத்தில் பல சலுகைகளையும், வசதிகளையும் வழங்குகிறது. ரயில் பயணிகளையும் அவர்களது உடமைகளையும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல உதவும் ஒரு அற்புதமான போக்குவரத்து சாதனமாகும். பல்வேறு வகையான ரயில்கள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

இவற்றில் பயணிக்கும் போது நமது சுற்றுப்புறம் சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மூலம் ரயில்களை மேம்படுத்தவும் பராமரிக்கவும் ரயில்வே துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ரயிலின் வெளிப்புறங்களில் எங்கள் விளம்பரங்களை வடிவமைத்துள்ளோம்.” என்று கூறினார்.

சென்னை வி கேர் குழுமம் மிகப் பெரிய அளவில் இந்த கோயம்புத்தூர்-பெங்களூரு டபுள் டெக்கர் ரயிலில் விளம்பரம் செய்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 43 கிளினிக்குகளில் நவீனமயமாக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் வழங்கப்படும் Vcare நிறுவனத்தின் முடி தயாரிப்புகள், தோல் பொருட்கள் மற்றும் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த இரட்டை அடுக்கு ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் இடம்பெற்றிருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்து இந்தியா முழுவதும் உள்ள 43 Vcare நிறுவனத்தின் கிளினிக்குகளில் வழங்கப்படும் சிகிச்சை விபரங்களை அறிய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

VCARE, VCARECLINICS, COIMBATORE, SKINCARE, HAIRCARE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்