'இன்னும் கொஞ்சம் சேனல் அதிகமா பாருங்க... ஹாப்பியா இருங்க!'... கேபிள், டிடிஹெச் கட்டணங்களில் அதிரடி மாற்றம்!... ட்ராய் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேபிள் டிவி மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகளை ட்ராய் வெளியிட்டுள்ளது.
ட்ராய் வெளியிட்டுள்ள புதிய கட்டண முறைகளின் கீழ் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.
டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி, d2h அல்லது சன் டைரக்ட் ஆகிய டிடிஹெச் கனெக்ஷன் வைத்திருக்கும் பயனாளர்கள் இதன் மூலம் அதிகப்பயன் அடைந்துள்ளனர். மேலும், புதிய விதிமுறையின் அடிப்படையில் மாதம் 130 ரூபாய் கட்டணத்தில் 200 சேனல்கள் கிடைக்கும். முன்னதாக 130 ரூபாய்க்கு 100 சேனல்கள் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தன.
ஒவ்வொரு 20 கூடுதல் சேனல்களுக்கும், நீங்கள் 25 ரூபாய் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டும். டிஷ் டிவி, d2h பயனாளர்கள் 200 சேனல்களுக்கு 153.40 ரூபாய் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் 10 சேனல்களுக்கும் 10 ரூபாய் கூடுதல் கட்டணமாக செலுத்தவேண்டும்.
டாடா ஸ்கை பயனாளர்கள் முதல் 200 எஸ்டி சேனல்களுக்கு 153.40 ரூபாயும் கூடுதல் சேனல்களுக்கு மாதம் 188.80 ரூபாயும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. 2 எஸ்டி சேனல்கள் இணைந்ததுதான் ஒரு ஹெச்டி சேனலாக மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்!... காரணம் என்ன?... தற்போதைய நிலவரம் என்ன?
- 'அதிகரிக்கும் மீன்கள் விலை!'... காரணம் என்ன?... இப்போதைய நிலவரம் என்ன?
- ”அதுக்கெல்லாம் குட் பை!”.. “டிடிஎச்-லயே 200 சேனல்ஸ்!”.. “அதுவும் இவ்ளோ குறைந்த விலையிலா?”.. ட்ராய் அதிரடி!
- என்னாது வெங்காயம் 'இவ்ளோ' கம்மி விலைக்கு தர்றாங்களா? முண்டியடித்து அலைமோதிய கூட்டம்! வீடியோ!
- ‘கட்டண உயர்வின்றி தொடர’.. ‘பிரபல’ நெட்வொர்க்கின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ‘அசத்தல் ஐடியா’..
- 'நீங்க பிரியாணி பிரியரா'?...'திடீர்ன்னு வந்த சோதனை'... கவலையில் பிரியாணி பிரியர்கள்'!
- 'மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு'... விவரம் உள்ளே!
- ‘ஒரு மாசத்துல மட்டும் இவ்ளோ பேரா..!’.. ஏர்டெல், வோடாஃபோனை பின்னுக்கு தள்ளிய ஜியோ..!
- 'வாங்க வாங்க ஒரு டோக்கனை போட்டுட்டு போங்க'...'இந்த ஸ்பாட்ட பாக்க கட்டணம்'...வெளியான அறிவிப்பு!
- 'ஒரு லிட்டர் இவ்வளவு ரூபாயா?'.. 'பெட்ரோல் விலையை முந்திய பால் விலையேற்றம்'.. அதிர்ச்சியில் மக்கள்!