Prepaid Validity.. இனி 28 நாட்கள் மட்டும் போதாது.. டிராய் போட்ட சூப்பர் உத்தரவு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும், டிராய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Advertising
>
Advertising

டிஜிட்டல் யுகத்தில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், மொபைல் போன் பயன்படுத்தாத நபர்களை நாம் விரல் விட்டே எண்ணி விடலாம் என்று தான் கூற வேண்டும்.

ஒருவரிடம் பேசுவதில் தொடங்கி, இன்று கரண்ட் பில், கேஸ் பில் என எந்த பில் வேண்டுமானாலும் மொபைல் போன் மூலம் அடைத்து விடலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது.

அதிரடி உத்தரவு

இந்நிலையில், மக்கள் அனைவரும் பல விதமான நெட்வொர்க் சேவையை பயன்படுத்தி வருவதையடுத்து, அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும், அதிரடி உத்தரவு ஒன்றை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்- Telecom Regulatory Authority of India) பிறப்பித்துள்ளது.

13 முறை ரீசார்ஜ்

தற்போது, ப்ரீபெய்டு செல் போன் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு மாத திட்டம் என்ற பெயரில் வழங்கப்படும் வவுச்சர்கள், 28 நாட்களாக தான் இருக்கின்றன. இதன் காரணமாக, ஒரு ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலையும் உள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும், 30 நாள் திட்டம் ஒன்றை, கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.

மகிழ்ச்சியில் மக்கள்

இதன் படி, சிறப்பு டாரிஃப் வவுச்சர், காம்போ வவுச்சர் ஆகியவை செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, ஒரு ஆண்டிற்கான ரீசார்ஜ் எண்ணிக்கை குறையவுள்ள நிலையில், அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

TRAI, TELECOM, PREPAID VALIDITY, டிராய், வேலிடிட்டி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்