“என் வீட்ட சேர்ந்தவங்க இருந்தா எப்படி இருக்குமோ.. அப்படிதான் இருந்துச்சு!”.. ஆம்புலன்ஸ் வந்ததும் டிராஃபிக் காவலரின் ‘சல்யூட் அடிக்க வைத்த செயல்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாஐதராபாத்தின் அபிட்ஸ் சாலையில் இருந்து கோட்டி சாலை வரை ஏறத்தாழ 2 கி.மீ தூரம், டிராபிக் போலீஸ் ஒருவர் நெரிசல் மிகுந்த சாலையில், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவகுக்க ஓடி சென்ற சம்பவம் வைரலாக நெட்டில் பரவியது.
கடந்த திங்கள் (02-11-2020) அன்று அபிட்ஸ் ஜிபிஓ சிக்னல் அருகே நெரிசலான நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தபோது டிராபிக் போலீஸ் பாப்ஜி, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முன்னே 2 கி.மீ ஓடி, வாகன நெரிசலை சரிசெய்து, வழிவகுத்து கொடுத்தார்.
ஆம்புலன்சில் பயணித்த யாரோ ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளனர். ஜிபிஓ சிக்னல் பகுதியில் இருந்து, ஆம்புலன்ஸ் முன்னே ஓடி, வழிவிடாத வாகன ஓட்டிகளை ஓரம் போக சொல்லி கொண்டே, ஓடிய பாப்ஜியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அம்புலன்சுக்கு வழி ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தம் மனதில் இருந்ததாகவும், தனது செயலுக்கு கிடைத்த பாராட்டுகள் நிறைவாக இருப்பதாகவும், தன் வீட்டை சேர்ந்தவர்கள் அந்த ஆம்புலன்சில் இருந்தால், எப்படி இருக்குமோ, அப்படியே நான் உணர்ந்ததாகவும் பாப்ஜி கூறி இருந்தார்.
இதுபற்றி ஐதராபாத் கூடுதல் கமிஷனர் அணில் குமார் பாராட்டி ட்வீட் போட்டிருக்கிறார். பல்வேறு சீனியர் காவல் அதிகாரிகளும் பாப்ஜிக்கு தங்களது பாராட்டுகளை வழங்கி வருகின்றனர். அத்துடன் பாப்ஜிக்கு ஐதராபாத் காவல் துறை நேரில் பாராட்டுகளை தெரிவித்து கௌரவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மறுபடியும் முழு ‘ஊரடங்கு’.. பதற்றத்தில் சொந்த ஊருக்கு ‘படையெடுத்த’ மக்கள்.. ‘700 கிமீ’ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்.. ‘ஸ்தம்பித்து’ போன நாடு..!
- 'இந்திய மக்களின் இதயத்தில் குடிபுகுந்த ஆம்புலன்ஸ் டிரைவர்...' '200 கொரோனா நோயாளிகளை சுமந்து சென்றவர்...' - நெகிழ்ச்சி சம்பவம்...!
- சீக்கிரமா அவருக்கு சிறுநீரகத்தை கொண்டு போய் சேர்த்திடணுமே...! ‘ரொம்ப நேரம் ஆக கூடாது...’ ‘ஆம்புலன்ஸை ஸ்பீடுல தெறிக்க விட்ட டிரைவர், கடையில...’ - உச்சக்கட்ட பரபரப்பு சம்பவம்...!
- வாகனங்களுக்கான 'நம்பர் பிளேட்' விதிமுறைகள் மாற்றம்!.. புதிய விதிமுறைகள் என்ன?.. போக்குவரத்து காவல்துறை அதிரடி அறிவிப்பு!
- "கொரோனானு தான் கூட்டிட்டு போனாங்க"... 'இளம்பெண்ணை தேடியலைந்தபோது'... 'போலீசுக்கு வந்த ஒரு போன்'... 'அடுத்தடுத்து எவ்ளோ டிவிஸ்டு!!!'...
- ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லும் போது ‘ஆம்புலன்ஸுக்கு’ தீ வைத்த ரவுடி.. போலீஸ் ஸ்டேஷன் முன் நடந்த பரபரப்பு..!
- ‘கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா காப்பாத்திருக்கலாமே’.. நடுரோட்டில் ‘மரங்களை’ போட்டு போராட்டம்.. பரபரப்பான நேஷனல் ஹைவே..!
- VIDEO: பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தி... ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட ஜெகன் மோகன் ரெட்டி!.. கான்வாய் புடைசூழ... சாலையில் நெகிழ்ச்சி சம்பவம்!
- VIDEO : "ஆத்தி, நம்ம புருஷன் காருல, யாரு அது 'பொண்ணு'??"... "ஹேய், 'அவள' வெளிய வர சொல்லு..." - நடுரோட்ல 'வண்டி'ய நிப்பாட்டி, அட்ராசிட்டி காட்டிய 'மனைவி'!
- 22 வயதில் கொரோனாவுக்கு பலியான 'ஆம்புலன்ஸ்' ஊழியர்... கொரோனா 'கன்ஃபார்ம்' ஆனத கூட வீட்ல சொல்லாம இருந்துருக்காரு!