சூரிய உதயத்துக்கு முன்னாடியோ.. அஸ்தமனத்துக்கு அப்பறமா யாரும் உள்ள போக அனுமதி இல்ல.. பல வருஷமா துரத்தும் சாபம்..இந்தியாவுல இப்படி ஒரு கோட்டையா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தானில் உள்ள பாங்கர் கோட்டைக்குள் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னரும், சூரிய உதயத்துக்கு முன்னரும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இந்த கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.

Advertising
>
Advertising

Also Read | காசு கொடுத்து செல்லாத 500, 1000 ரூ நோட்டுகளை லட்ச கணக்கில் வாங்கிக் குவித்த 2 பேர்..போலீசுக்கு கிடைச்ச ரகசிய தகவல்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

அமானுஷ்யமான விஷயங்களுக்கு எப்போதுமே மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. அதனை காணவும், அதுகுறித்து தெரிந்துகொள்ளவும் இயல்பாகவே பலரும் விரும்புகிறார்கள். அப்படியானவர்களுக்கான இடம் தான் இந்த பாங்கர் கோட்டை. ராஜஸ்தாஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள சரிஸ்கா என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் தான் இந்த பாங்கர் என்ற கோட்டை அமைந்திருக்கிறது.

வினோத சத்தம்

இந்த கோட்டையில் இரவு நேரங்களில் மக்கள் யாரும் செல்ல அனுமதியில்லை. அதாவது முன்பே சொல்லியது போல, சூரியன் உதிப்பதற்கு முன்னரோ அல்லது அஸ்தமனத்துக்கு பின்போ மக்கள் யாரும் இந்த கோட்டைக்குள் செல்ல அனுமதி கிடையாது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது இந்த கோட்டை. இதனுள் இரவு நேரங்களில் பெண் ஒருவர் அழுவது போன்ற சத்தம் கேட்பதாக கூறுகிறார்கள் உள்ளூர் மக்கள்.

அதுமட்டும் அல்லாமல் வளையல் உடைபடும் சத்தம், சில நேரங்களில் பாடல்கள் கூட இந்த கோட்டையில் இருந்து கேட்குமாம். நூற்றாண்டு கால இந்த நம்பிக்கைக்கு இரண்டு கதைகள் காரணமாக சொல்லப்படுகின்றன. அவை உண்மையானதா? அல்லது புனையப்பட்டதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்.

சாபம்

இந்த கோட்டையை மாதோ சிங் என்னும் மன்னர் கட்டியிருக்கிறார். அஸ்திவாரம் அமைப்பதற்கு முன்னர், அருகில் தியானம் செய்துவந்த பாலநாத் என்னும் முனிவரிடம் அனுமதி கேட்டாராம் மன்னர் மாதோ சிங். அப்போது, கோட்டையின் நிழல் தான் தியானம் செய்யும் இடத்தின் மீது விழக்கூடாது என முனிவர் கூறியுள்ளார். அதற்கு ஒப்புதல் தெரிவித்த மன்னரும் கோட்டையை கட்டி முடித்திருக்கிறார்.

ஆனால், சில மாதங்களில் சூரியனின் கோணம் மாறியதால் முனிவரின் இடத்தில் கோட்டையின் நிழல் விழுந்திருக்கிறது. இதனால் முனிவர் கோபமடைந்து சபித்துவிட்டதாகவும் அதனாலேயே இந்த கோட்டை பொலிவிழந்து மக்கள் வசிக்க முடியாத இடமாக மாறிவிட்டதாகவும் நம்புகிறார்கள் உள்ளூர் மக்கள்.

இரண்டாவது கதை

பாங்கர் கோட்டையில் வாழ்ந்த இளவரசி அந்த வட்டாரத்திலேயே அழகியாக திகழ்ந்தவர் என்றும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட மாந்திரீகனான சிங்கியா ஒரு சதி செய்தார் என்றும் சொல்கிறார்கள் மக்கள். இளவரசி சந்தைக்கு சென்ற போது மந்திர எண்னெய் ஒன்றை கொடுத்திருக்கிறார் சிங்கியா. அப்போது எண்ணெயை இளவரசி கீழே ஊற்றியிருக்கிறார். அது பாறையாக மாறி சிங்கியாவை அழுத்தியிருக்கிறது. அப்போது தனது மரணத்துக்கு முன்னர் சிங்கியா சாபம் விட்டதாகவும் அடுத்த ஆண்டு நடந்த போரில் இளவரசி கொல்லப்பட்டதுடன் கோட்டையும் பாழடைந்த நிலைக்கு தள்ளப்பட்டதாவும் கூறுகிறார்கள் உள்ளூர் மக்கள்.

இந்த இரண்டு கதைகளில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த கோட்டைக்குள் சூரியன் உதிப்பதற்கு முன்னரோ அல்லது அஸ்தமனத்துக்கு பின்போ மக்கள் யாரும் செல்ல அனுமதி இன்றும் மறுக்கப்படுவது மட்டும் உண்மை.

Also Read | திடீர்னு பச்சை கலர்ல மாறுன வானம்.. ஆச்சர்யமா இருக்கேன்னு நினைச்ச மக்களுக்கு கொஞ்ச நேரத்துல காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரித்த ஆராய்ச்சியாளர்கள்.. வைரலாகும் வீடியோ.!

TOURISTS, HAUNTED BUILDING, INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்