அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவல்!.. "எனக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது!".. இஸ்ரோ மூத்த விஞ்ஞானி பகீர் கருத்து!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > இந்தியா3 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரோ தலைமையகத்தில் வைத்து தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக இஸ்ரோவின் உயர்மட்ட விஞ்ஞானி குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரோவில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர், தபான் மிஸ்ரா. இதற்கு முன்பாக, இஸ்ரோவின் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
இவர், விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது, இஸ்ரோ மெரிட் விருது உள்ளிட்ட விருதுகள் பெற்ற சிறந்த விஞ்ஞானி ஆவார்.
இந்நிலையில், தபான் மிஸ்ரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "Long Kept Secret" என்ற தலைப்பில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வு நேர்காணலின்போது, தனக்கு ஆபத்தான ஆர்சனிக் ட்ரொக்ஸைடு விஷத்தை தோசை மற்றும் சட்னி உடன் கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அதனை உட்கொண்ட பின்பு கடுமையான சுவாசக் கோளாறு, அசாதாரண தோல் வெடிப்புகள் மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜூலை 2017-ல் உள்துறை பாதுகாப்புப் பணியாளர்கள் தன்னை சந்தித்து, தனக்கு ஆர்சனிக் விஷம் கொடுக்கப்பட்டது குறித்து தகவல் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ள மிஸ்ரா, அதன் பின்னர்தான் மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
தனக்கு விஷம் அளிக்கப்பட்டதன் நோக்கம் உளவு தாக்குதலாக இருக்கலாம் எனவும், ராணுவ மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட நடவடிக்கைக்குக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கும் ஒரு விஞ்ஞானியை பயணத்தில் இருந்து அகற்றுவது முக்கிய நோக்கமாக இருந்திருக்கலாம் எனவும் உதாரணமாக சிந்தடிக் அபர்சர் ரேடார் போன்றவற்றில் நிபுணத்துவம் உள்ளவர்கள் அவர்களது இலக்கில் இருந்திருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டினார்.
இஸ்ரோ விஞ்ஞானி தபன் மிஸ்ரா வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் இஸ்ரோவிலும், மேலும் பல அதிகார வட்டங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து இந்தச் செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடிக்குமாறு மிஸ்ரா மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிஸ்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரோ தரப்பிலிருந்து பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குடிக்கிற தண்ணியில விஷம்’.. 2 குட்டியுடன் இறந்த ‘தாய் புலி’.. நெஞ்சை பதறவைத்த கொடுமை..!
- கொரோனாவுக்கே 'ஷாக்' வைக்கும் 'மாஸ்க்...' 'வைரஸ்' பாதுகாப்பில் புதிய 'மைல் கல்...' 'இஸ்ரேல்' விஞ்ஞானிகளின் 'அசத்தல் கண்டுபிடிப்பு...'
- 'கொரோனாவுக்கு' 5 பவுண்ட் செலவில் 'மருந்து...' 'பிரிட்டன்' விஞ்ஞானிகள் 'கண்டுபிடிப்பு...' இறப்பு விகிதம் '5ல் ஒரு பங்காக' குறைவதாக 'அறிவிப்பு...'
- வந்து விட்டது ‘ரிமோட்’ வெண்டிலேட்டர்... 'போலந்து' விஞ்ஞானிகளின் 'அசத்தல் கண்டுபிடிப்பு...' 'மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு...' 'விலையும் குறைவு...'
- '8 மாதங்களுக்கு' முன்பே 'கொரோனா' உருவானது... மேலும் பல 'வைரஸ்கள்' உருவாக 'வாய்ப்புள்ளது...' 'ஸ்பெயின்' விஞ்ஞானிகள் பரபரப்பு 'தகவல்...'
- 'மருந்து கண்டுபிடிக்கும் முன்பே...' 'கொரோனா வைரஸ்' தானாக 'அழிந்துவிடும்...' 'ஆறுதல் அளிக்கும் விஞ்ஞானியின் கூற்று...'
- தனது 'செயல்பாட்டை' குறைத்துக் கொண்ட 'சூரியன்...' 'பூமிக்கு ஆபத்தா?...' 'விஞ்ஞானிகள் என்ன கூறுகின்றனர்?'
- 'காற்றில் உலவும் கொரோன மூலக்கூறு...' 'அவைதான் கொரோனா வேகமாக பரவ காரணமா?...' 'பீதியை கிளப்பும் சீன விஞ்ஞானிகள்...'
- உலகமே 'எதிர்பார்த்து' காத்திருக்கும் கொரோனா 'தடுப்பூசி'... 'எந்த' மாதத்திற்குள் தயாராகும்?... 'ஆக்ஸ்போர்டு' விஞ்ஞானி 'தகவல்'...
- 'தும்மல்', இருமலின் போது... 'கொரோனா' நீர்த்துளிகள் '27 அடி' வரை 'பயணிக்கும்' ஆனால்... 'புதிய' தகவலுடன் 'எச்சரிக்கும்' விஞ்ஞானிகள்...