'எட்றா வண்டிய ரிவர்ஸ்ல...' 'பாவம்ல அந்த மனுஷன், அவர அப்படியே விடக் கூடாது...' மனிதம் காத்த ஓட்டுநர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இதுவரை நாம் ரயில் முன்னாடி ஓடி தான் பார்த்திருப்போம்.. அதிவேகத்தில் சென்ற ரயில் மீண்டும் ஒரே ஒரு பயணிக்காக ஒரு கிலோ மீட்டர் ரயில் பின்னோக்கி ஓடியுள்ளது.

மஹாராஷ்டிராவில், ராகுல் பட்டீல் என்பவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது தீடீரென ஏற்பட்ட தடுமாற்றத்தால் அதிவேகத்தில் பயணித்து கொண்டிருந்த ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். உடனே சுதாரித்துக்கொண்ட சக பயணிகள் அவரை காப்பாற்ற உதவி செய்தும் பலனளிக்கவில்லை. அவருடன் உடன் வந்த நண்பர் ரயிலில் இருக்கும் அவசர சங்கிலியைப் இழுத்து ரயிலை நிறுத்தி ஓட்டுநர் குழுவுக்கு தகவலைத் தெரிவித்தனர்.

இதனை அறிந்த ஓட்டுநர் குழுவினர் நடுவழியில் படுகாயங்களுடன் தவித்த அவரை அப்படியே விட்டு முன்னோக்கி செல்ல மனமில்லாமல் மீண்டும் ரயிலை பின்னோக்கி இயக்கினர். பர்தண்டே, மாஹேஜி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயில் தவறி விழுந்த பயணியை காப்பாற்றுவதற்காக மீண்டும் ரயில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ரிவர்ஸ் எடுத்து ராகுலை மீட்டனர்.

அதன் பின் நண்பர்கள் மற்றும் சக பயணிகளின் உதவியுடன் ராகுல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைஎடுத்து வருகிறார். ரயில் ஒருமணி நேரம் தாமதமாகச் சென்றபோதும், பயணியை மீட்க மனிதாபிமானத்துடனும் சிறப்பாகவும் செயல்பட்ட ரயில் ஓட்டுநர் குழுவுக்கு சக பயணிகளுக்கும்  பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

DRIVERSAVELIFE

மற்ற செய்திகள்