'தமிழகத்தில்' தென்மேற்குப் பருவமழை 'எப்போது' தொடங்கும்?... இந்திய வானிலை ஆய்வு மையம் 'தகவல்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய துணைக் கண்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "பொதுவாக தென்மேற்குப் பருவமழை இந்திய துணைக் கண்டத்தில் கேரளாவிலிருந்துதான் தொடங்கும். அதன் அடிப்படையில் கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும். தமிழகத்தில் ஜூன் 4ஆம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை முடிவடையும். அதன் பின்னர் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும்.
இந்த ஆண்டு நாடு முழுவதும் மழை இயல்பான அளவில் இருக்கும். சராசரியாக 88 செ.மீ. மழைப்பொழிவு இருக்கும். தொடங்கிய முதல் வாரத்தில் தென்னிந்தியப் பகுதிகள் முழுவதும் தென்மேற்குப் பருவமழை சென்றடைந்து பின்னர் சிறிது தொய்வு நிலையை அடைந்து மீண்டும் இந்தியா முழுவதும் சென்றடையும். ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஒரு வாரம் முன்னதாகவே பருவக்காற்று சென்றடையும். பருவநிலை மாற்றத்தால் இரண்டாம் பருவத்தில் பருவமழை (அக்டோபர் மாதத்தில்) குறையும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில்...' 'வௌவால்களுக்கு கொரோனா தொற்று...' 'இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்...'
- கொரோனா 'உயிரிழப்பு' சதவிகிதத்தில்... மஹாராஷ்டிரா,'தமிழ்நாடை' பின்னுக்குத்தள்ளி... 'முதலிடம்' பிடித்த மாநிலம்!
- ‘நின்றுப்போன கல்யாண சோகத்திலும்’... ‘முகூர்த்த நேரத்தில்’... ‘ஊரடங்கால் தவித்த இளம்பெண்ணுக்காக’... ‘இளைஞர் செய்த உணர்வுப்பூர்வமான காரியம்’!
- 'கேரளாவில் குணமான வெளிநாட்டினர்'...ஏன் 'எச்.ஐ.வி' மருந்து கொடுக்கப்பட்டது?... பின்னணி தகவல்கள்!
- 'பாராட்டு மழையில் கேரளா...' 'கொரோனா வைரஸ் ஒழிப்பில் முன்னோடி மாநிலம்...' இது எப்படி சாத்தியம்...? சிறப்பு தகவல்கள்...!
- “போலீஸாரின் நெகிழ வைக்கும் மனிதநேயம்.. தெருவோர நபரின் வியக்க வைக்கும் விழிப்புணர்வு!”... வைரல் வீடியோ!
- 'தமிழகத்தில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு!'.. 'உடல் கருகி பலியான சோகம்!'
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...
- ‘கொரோனாவுக்கு மருந்து’... ‘புதிய முயற்சிக்கு, நாட்டிலேயே முதலாவதாக'... ‘ஐ.சி.எம்.ஆரிடம் அனுமதி பெற்ற மாநிலம்’!
- கொரோனா தடுப்பு பணியில்... செவிலியர்கள் 'சேலை' அணிய தடை!... என்ன காரணம்?