"பரபரப்பான" அரசியல் சூழலில் தமிழக 'முதல்வர்' எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று சந்திப்பு! முழு விபரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எத்தனை தடை வந்தாலும் வேல் யாத்திரை தொடரும் , தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். 

இதனிடையே தி.நகரில் பத்திரிகையாளர் சந்திப்பில், கொரோனா முன்களப் பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல் யாத்திரை. பல தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் யாத்திரையில் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தார். 

பின்னர் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பா.ஜ.க. தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கே.டி. ராகவன் சொன்னது சரிதான் என்றும் கூறியதுடன், அ.தி.மு.க. உடனான கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு என்றும் தெரிவித்திருந்தார். 

அத்துடன் தேர்தல் வரக்கூடிய நேரத்தில் தமிழகத்தில் கூட்டம் நடத்தாமல் எப்படி இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று மாலை 5:30 மணிக்கு முதல்வர் பழனிசாமியுடன் எல்.முருகன் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்