திறக்கப்படுகிறது திருப்பதி ஏழுமலையான் கோயில்!.. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் 60 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில மாநிலங்களில் வழிபாட்டுத்தலங்களைத் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, சில மாநிலங்கள் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. தமிழகமும் வழிபாட்டுத்தலங்களைத் திறப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், திருப்பதி கோயிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கோயிலில் 6 அடி இடைவெளியுடன் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஆந்திர அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி, 'திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஜூன் 11 முதல் வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜூன் 11 முதல் தினமும் ஆன்லைனில் டிக்கெட் விநியோகம்; 3 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்த சுப்பா ரெட்டி, 'ஜூன் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாதவர்களுக்குத் திருப்பதி மலை அடிவாரத்தில் கவுண்ட்டர் அமைத்து டிக்கெட் விநியோகம் செய்யப்படும். பக்தர்களுக்கு கொரோனா இருந்தால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்' எனக் கூறியுள்ளார்.
ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டுமே ஏழுமலையான தரிசிக்க அனுமதி வழங்கப்படும். ஸ்ரீவாரிமெட்டு வழியாக பக்தர்கள் நடந்து திருப்பதி மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அப்ரைசலுக்கு வேட்டு வைத்த கொரோனா'... 'மாச சம்பளக்காரங்க, பேச்சிலர்ஸ் கவனத்திற்கு'... 'இந்த வருஷம் எப்படி'?... ரிசர்வ் வங்கி ஆய்வில் கணிப்பு!
- 'ஜார்ஜ் பிளாய்ட்' கொலை வழக்கில் 'திருப்பம்...' 'படுகொலைக்கு' பிந்தைய சோதனையில் 'கொரோனா உறுதி...' 'டாக்டர்கள்' தந்த 'அதிர்ச்சி ரிப்போர்ட்...'
- 'முதல்வர்' காப்பீட்டு திட்டத்தின் கீழ்... தனியார் மருத்துவமனைகளில் 'கட்டணமின்றி'... கொரோனா சிகிச்சை பெறலாம்!
- இனிமே 'வீட்டுல' தனிமைப்படுத்த மாட்டோம்... கண்டிப்பா 'இங்க' தான் போகணும்: சென்னை மாநகராட்சி ஆணையர்
- 'இறப்பதற்கு' முன் அவருக்கு... பிரேத 'பரிசோதனை' அறிக்கையில்... வெளியான 'புதிய' தகவல்!
- 10-ம் வகுப்பு தேர்வுக்காக... 'சென்னை'யில் இருந்து 'கொடைக்கானல்' சென்ற மாணவிக்கு... 'காத்திருந்த' அதிர்ச்சி!
- "மேல டச் பண்ண கூடாது ஓகே!".. 'தனிமனித' இடைவெளியுடன் பயணிக்கும் 'குரங்கு!'.. வைரல் வீடியோ!
- "மறுபடியும் மொதல்ல இருந்தா?".. 'யூ-டர்ன் அடித்த உலக சுகாதார மையம்'.. அதிரடி அறிவிப்பு!
- 'எல்லாரும் மன்னிச்சிடுங்க'... 'ஜூம் வீடியோ காலில் மீட்டிங்'... 'கேமரா ஆன் ஆனது தெரியாமல் நடந்த பகீர் சம்பவம்'!
- 'கொரோனா' வைரஸை கட்டுப்படுத்த 'புதிய மாத்திரை...!' 'வென்டிலேட்டர்களுக்கு குட்பை சொல்லுமா?...' 'இங்கிலாந்து' மருத்துவர்களின் 'புதிய நம்பிக்கை...'