'திருப்பதி லட்டு பிரியரா நீங்கள்?'.. பக்தர்களுக்காக அதிரடி திட்டத்துடன் களமிறங்கிய தேவஸ்தானம்!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு முடியும் வரை திருப்பதியில் ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25-க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:-
ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் கடந்த 2 மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தரிசனம் கிடைக்காத நிலையில் ஏழுமலையானின் பிரசாதத்தையாவது அளிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
அதனால் ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25-க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு முடியும் வரை இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும். ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தேவஸ்தான மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், வேலூர், கன்னியாகுமரியில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் உள்ளிட்டவற்றில் ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் லட்டு பிரசாதத்தை வாங்கி சென்று பக்தர்களுக்கு அளிக்கலாம். இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் லட்டு பிரசாத விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடிச்சான் பாருய்யா 'லக்கி பிரைஸ்சு...' '47 கோடி ரூபாய்...' இந்தத் 'தெரு என்ன விலை' மொமண்ட்...
- ரூபாய் 'நோட்டுகள்' வழியாக கொரோனா பரவுமா?... என்ன 'செய்ய' வேண்டும்?... விளக்கம் உள்ளே!
- குடோனில் மருந்து தயாரித்து... வெளிநாடுகளுக்கு விநியோகம்!.. வெளியாகிய பகீர் தகவல்!.. போலீஸ் வலையில் திருத்தணிகாசலம்!
- கொரோனா 2-வது அலையில் ‘உருமாறிய’ வைரஸ்.. அடுத்த குண்டை தூக்கிப்போட்ட ‘சீன’ மருத்துவர்கள்..!
- 'மாஸ்க்' அணிந்தபடி 'கடைக்குள்' நுழைந்த 'திருப்பதி' பெண்கள்!.. 'சிசிடிவி' கேமராக்களை 'உடைத்து' செய்த பரபரப்பு 'காரியம்'!
- 'கொரோனா' வார்டுக்கு பிரியாணியுடன் வந்த 'டெலிவரி' பாய்!.. அதிர்ந்த 'மருத்துவமனை'... 'ருசிகர' சம்பவம்'!
- 'மாஸா இருக்கா?.. ''மாஸ்க் மட்டும் இல்ல.. 'இவங்க கொரோனவ டீல் பண்ணிய விதமும் மாஸ்தான்'.. 'பாதித்தோர் எண்ணிக்கையும்.. குணமானோர் எண்ணிக்கையும்.. நீங்களே பாருங்க!'
- இது இருந்தா 'கொரோனா' கிட்ட நெருங்காதாம்... ஆனா வெலைதான் 'ஒரேயடியா' தூக்கியடிக்குது!
- மொத்தமாக மூடப்பட்ட 'ஹோல்சேல்' கடைகள்... 'இந்த' அத்தியாவசிய பொருட்களின் விலை 'கிடுகிடுவென' உயரலாம்!
- தமிழகத்தில் துளிர்விடும் நம்பிக்கை!.. இன்று ஒரே நாளில் 987 பேர் குணமடைந்தனர்!.. முழு விவரம் உள்ளே