திருப்பதி ஏழுமலையான் கோவில்... பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!... தரிசனத்திற்கான முன்பதிவில் தேவஸ்தானம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு செய்யப்படும் முன்பதிவு குறித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஜூன் மாதத்திற்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மே மாதத்திற்கு முன்பதிவு செய்திருந்த தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் 2 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படும். இதனால் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்வார்கள்.
இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு கோட்டா நாளை வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தற்காலிகமாக டிக்கெட் முன்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், மே 30-ந்தேதி வரை தரிசனம் மற்றும் அறைகள் முன்பதிவு செய்த பக்தர்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்தும், அதற்கான பணத்தை மீண்டும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் 20-ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டு, சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் மட்டும் வழக்கம் போல் நடைபெறுகிறது. இதில் அர்ச்சகர்கள் மற்றும் சில அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உலகமே ‘கொரோனாவ’ கட்டுப்படுத்த ஓடிட்டு இருக்கு.. இந்த சமயத்தை பயன்படுத்தி ‘இது’ நடக்க வாய்ப்பு இருக்கு.. ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை..!
- 'கொரோனா 50 கோடி மக்களை ஏழையாக்கும்...' '40%பேர்' 'கிழக்காசியவை' சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.. 'ஐ.நா.வின் அதிரவைக்கும் அறிக்கை...'
- 'தமிழகத்தில்' மேலும் '14 நாட்கள்' ஊரடங்கை 'நீட்டிக்க' பரிந்துரை... 'முதல்வருடன்' ஆலோசனை நடத்திய 'நிபுணர்' குழு தகவல்...
- ‘திருச்சியில் கொரோனா சிகிச்சையில் இருந்த இளைஞர் குணமடைந்தார்’.. மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு அனுப்பிய மருத்துவர்கள்..!
- “போலீஸாரின் நெகிழ வைக்கும் மனிதநேயம்.. தெருவோர நபரின் வியக்க வைக்கும் விழிப்புணர்வு!”... வைரல் வீடியோ!
- VIDEO : இதென்ன 'அமெரிக்கர்களுக்கு' வந்த 'சோதனை'... 'உணவுக்காக' நீண்ட வரிசையில் 'காத்திருக்கும்' சோகம்... '100 பேருக்கே உணவு..'. ஆனால், '900 பேர் காத்திருப்பு...'
- சவுதி அரேபிய அரச குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா!?... தயாராகும் சிறப்பு மருத்துவமனை!... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
- 'ரீசார்ஜ் ஃபார் குட்'... 'உதவியாக' செய்யும் ஒவ்வொரு ரீசார்ஜிற்கும் 'கேஷ்பேக்' ஆஃபர்... 'பிரபல' நிறுவனம் அறிவிப்பு...
- ‘உடனே ஊரடங்கை நிறுத்தணும்’.. மிரட்டிய ‘போதைப்பொருள்’ கும்பல்.. மறுத்த மேயருக்கு நடந்த கொடூரம்..!
- கொரோனா 'பாதிப்பு' இருக்கு ஆனா... 'வைரஸ்' பரவலில் இருந்து மீண்டுவரும்... 'சீனாவிற்கு' எழுந்துள்ள 'புதிய' சிக்கல்...