இவ்வளவு டன் தங்கமா?.. திருப்பதி ஏழுமலையானின் மொத்த சொத்து மதிப்பு.. தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருப்பதி ஏழுமலையான் கோவிலின் மொத்த சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த வெள்ளை அறிக்கையை திருமலா திருப்பதி தேவஸ்தானம் போர்டு வெளியிட்டிருக்கிறது. அதில், கோவிலின் உபரி சொத்துக்கள் தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் மிகவும் பணக்கார கோவிலாக கருதப்படுகிறது திருப்பதி. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனிடையே கோவிலுக்கு கணிசமான அளவில் பக்தர்கள் நன்கொடையும் அளித்து வருகின்றனர்.
இந்தக் கோவிலை திருப்பதி திருமலா தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. அதன்படி, திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு குறித்து தேவஸ்தானம் போர்டு வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கோவிலுக்கு 10 டன் தங்கமும் 15,938 கோடி ரூபாய் சொத்தும் இருக்கிறது. தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கோவிலின் மொத்த சொத்து மதிப்பு 2.26 லட்சம் கோடிகள் ஆகும்.
சமீபத்தில், கோவிலின் உபரி வருவாய் அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்வதாக தகவல்கள் வெளியானது. இதனை மறுத்திருக்கும் தேவஸ்தானம் போர்டு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே முதலீடு செய்திருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், தங்க முதலீட்டிற்காக அதிக ரேட்டிங் பெற்றுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இந்திய ரிசர்வ் வங்கியால் உடனடி திருத்த நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பதி கோவிலில் கடந்த 8 மாதங்களாக திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் தொடர்ந்து 100 கோடிக்கும் அதிகமாக கிடைத்திருக்கிறது என முன்னதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் ஒவ்வொரு மாதமும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மக்கள் காணிக்கை செலுத்தியதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்