'திருப்பதி' ஏழுமலையான் கோவிலில்... பக்தர்கள் 'தரிசனம்' ரத்து... மலைப்பாதைகளும் மூடப்பட்டன!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற தலங்கள் பலவும் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மலைப்பாதைகள் மூடப்பட்டு உள்ளன. முன்னதாக பக்தர்களை காத்திருக்க வைக்காமல் அவர்களை நேரடி தரிசனம் செய்திட திருப்பதி நிர்வாகம் அனுமதித்து வந்தது.
இந்த நிலையில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்வது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தற்போது திருப்பதி மலையில் இருக்கும் பக்தர்களுக்கு மட்டும் ஏழுமலையான் தரிசனம் அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி மட்டுமல்லாமல் ஆந்திராவில் உள்ள அனைத்து கோவில்களிலும் தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கும் நடைமுறையை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை அடுத்து திருமலை இடையேயான மலைப்பாதைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. நடந்து மலையேறி செல்ல பயன்படுத்தப்படும் அலிபிரி நடைபாதை, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை ஆகியவையும் மூடப்பட்டு இருக்கின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '28 நாட்களுக்கு கோயிலுக்கு வராதீங்க!'... சிறப்பு தரிசன டிக்கெட்டுகளில் அதிரடி மாற்றங்கள்!... கொரோனா எதிரொலியால்... 'திருப்பதி தேவஸ்தானம்' தீவிரம்!
- 'இந்த மாதிரி இருந்தா'... 'தயவு செய்து சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம்'... 'திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்'!
- 'இனி இந்த பைகளில் தான்'... ‘பக்தர்களுக்கு லட்டு'... 'திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு'!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘சொகுசு பேருந்தும் மினி வேனும்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘நொடியில் நடந்து முடிந்த பயங்கரம்’..
- ‘ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி’.. ‘திருப்பதி கோயிலில் இனி’..
- திருப்பதில சாமி கும்பிட வந்த கிரிக்கெட் பிரபலங்கள்! செல்ஃபி எடுக்க சூழ்ந்த மக்கள்!