நாடே கொண்டாடிய வைரல் ‘காதல் ஜோடி’.. ஏன் இப்படியொரு முடிவு எடுத்தாங்க..? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடே கொண்டாடிய வைரல் ஐஏஎஸ் காதல் ஜோடி எடுத்த திடீர் முடிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடே கொண்டாடிய வைரல் ‘காதல் ஜோடி’.. ஏன் இப்படியொரு முடிவு எடுத்தாங்க..? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!

கடந்த 2015-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் டீனா டாபி என்ற பெண் முதலிடம் பெற்றார். அதுவும் முதல் முயற்சியிலேயே முதலிடம் பெற்று அசத்தினார். அதுமட்டுமல்லாமல் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்ற முதல் பட்டியலினப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். அதே தேர்வில் காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தை சேர்ந்த அதார் அமீர் கான் என்பவர் இரண்டாவது இடம் பெற்றார்.

Tina Dabi and Athar Aamir Khan, IAS topper couple divorced

முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில் ஐஏஎஸ் பயிற்சியில் பயின்றபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்போது இதுகுறித்து கூறிய டீனா டாபி, ‘அவருக்கு என்னைப் பார்த்ததுமே காதல் மலர்ந்துவிட்டது. காலையில் தான் இருவரும் முதன்முதலாக சந்தித்தோம். மாலையில் அவர் எனக்கு காதலை சொல்லிவிட்டார்’ எனக் கூறியிருந்தார்.

Tina Dabi and Athar Aamir Khan, IAS topper couple divorced

இவர்களது காதல் தேசிய அளவில் கவனம் பெற்றிருந்தது. அதற்கு காரணம், அதார் கான் ஓர் இஸ்லாமியர், டீனா டாபி இந்து என்பதுதான். இவர்களது காதலுக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததோ, அதே அளவுக்கு எதிர்ப்பு குரலும் கிளம்பியது.

அத்தனை எதிர்ப்பு குரல்களையும் புறந்தள்ளி இந்த ஜோடி கடந்த 2018-ல் கரம் பிடித்தது. அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சர்கள், மக்களவையின் அப்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். காதலர்களின் இந்த கலப்புத் திருமணம் முற்போக்கு சிந்தனைவாதிகளாலும் கொண்டாடப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டீனா டாபி, அதார் அமீர் கான் திருமணம் மத வெறுப்புகளும், சகிப்பின்மையும் அதிகரித்து வரும் காலத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்’ என்று கூறினார்.

இந்த நிலையில் இந்தத் தம்பதி கடந்த நவம்பர் மாதம் ஜெய்ப்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது. இருவரும் மனமுவந்து ஒருமித்து விவாகரத்து கோரியதால் அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. சாதி, மத எதிர்ப்பு என எதுவும் அசைக்காத காதல், திருமணத்தில் முடிந்து பின்னர் எதனால் முறிந்தது என்ற காரணம் வெளியாகவில்லை. இவர்கள் திருமண முறிவுக்கு நெட்டிசன்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டீனா டாபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘நீங்கள் என்ன செய்தாலும் யாரேனும் சிலர் உங்களைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அதனால், நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி சேர்க்கும் விஷயங்களை செய்யுங்கள். வாழ்க்கையை வாழுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்