‘குற்றத்தை கண்டுப்பிடிப்பதற்கான நேரம் இதுவல்ல’... ‘தற்போது என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம்’... மத்திய சுகாதாரத் துறை கருத்து!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி நிஜாமுதீன் கூட்டம் குறித்து மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது டெல்லியின் நிஜாமுதீனில் நடைபெற்ற இஸ்திமா குறித்து ஒருகேள்வி எழுந்தது. இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘கொரோனா வைரஸை பரப்பியது யார் எனக் கண்டறிய இதுநேரம் அல்ல. கொரோனா பரவுதை தடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுவதே சிறந்தது. எந்தவொரு பகுதியிலும் தற்போது கொரோனா பரவுதை கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது. எங்கெல்லாம் கொரோனா தொற்று இருக்கிறதோ அங்கு நாம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

முன்னதாக கடந்த மார்ச் 8-10, 12-15 ஆகிய தேதிகளில் டெல்லி நிஜாமுதீனில் Tabligh-e-Jamaat சார்பில் இரண்டு இஸ்திமாக்கள் நடைபெற்றன. அதில், சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 1,850 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் தமிழகம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டனர்.

அதற்கு முன்பாகவே பரவத் தொடங்கி விட்ட கொரோனா வைரஸ், இஸ்திமாவிற்கு விமானங்களில் வந்த வெளிநாட்டவர்களில் சிலருக்கும் தொற்றியுள்ளது. இது அப்போது கண்டறியப்படாத நிலையில், நடந்து முடிந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்தியர்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள தங்கள் ஊருக்கு சென்ற நிலையில், அவர்களுக்கும் கொரோனா தொற்றுக்கான சூழல் நிலவி உள்ளதே தற்போது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

CORONAVIRUS, TABLIGH-E-JAMAAT, NIZAMUDDIN, DELHI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்