ஓடும் ரயிலில் ‘பெண் கைதிக்கு’ நடந்த கொடூரம்.. ‘காவலர் செய்த அதிர்ச்சிக் காரியம்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாஓடும் ரயிலில் பெண் சிறைக்கைதி ஒருவரை காவலுக்கு வந்த போலீஸ் கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3ஆம் தேதி திஹார் சிறையைச் சேர்ந்த பெண் கைதி ஒருவரை ஒரு கான்ஸ்டபிள் மற்றும் 2 பெண் காவலர்கள் கொண்ட குழு ஒன்று மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளது. அங்கிருந்து மீண்டும் அவரை டெல்லிக்கு திருப்பி அழைத்துச் செல்லும்போது ரயிலில் கழிவறையைப் பயன்படுத்த வேண்டுமென அவர் கேட்டுள்ளார்.
அதற்காக கூட்டிச் சென்றபோது காவலுக்கு இருந்த இரண்டு பெண் காவலர்களையும் தங்கள் இடத்திற்கு போகுமாறு உடன் இருந்த கான்ஸ்டபிள் கூறியுள்ளார். அவர்கள் சென்ற பிறகு கழிவறைக்குள் சென்ற அவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் நடந்ததை யாரிடமும் கூறக்கூடாது என அந்தப் பெண்ணை அவர் மிரட்டியுள்ளார்.
சிறைக்குத் திரும்பும் வரை அமைதியாக இருந்த அந்தப் பெண் சிறை மருத்துவரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குடித்துவிட்டு கால் டாக்சியை இயக்கிய டிரைவர்'... 'காருக்குள்ளேயே மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’!
- அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து..! குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்..!
- ‘போலீஸ்’ எனக் கூறி இளைஞரைத் தாக்கிவிட்டு.. ‘காதலியைக் கடத்திச் சென்று செய்த கொடூரம்..’
- ‘கணவரை கிண்டல் செய்த மனைவி’... ‘சண்டையிட்ட கணவன்’... ‘தாய், மகள் செய்த பதறவைத்த காரியம்’!
- ‘ஓடும் ரயிலில் மகன் கண்முன்னே’.. ‘தாய்க்கும், மகளுக்கும் நடந்த..’ பதைபதைக்க வைக்கும் சம்பவம்..
- 'பாக்ஸிங்' தந்தையால்.. '7 வயது மகளுக்கு'.. நேர்ந்த 'கொடூரம்'.. அதன்பின் கோர்ட் வாசலில் அரங்கேறிய சம்பவம்!
- ‘நாடகம் பார்க்கும் ஆசையில்..’ வாசலில் படுக்க வைத்துச் சென்ற தாய்.. ‘7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்..’
- ‘ரயிலில் நடந்த அரிதிலும் அரிதான சம்பவம்’.. பறிபோன பெண் பயணியின் உயிர்..!
- பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது.. ‘துப்பாக்கி முனையில் இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’
- 'இதெல்லாம் மெட்ரோவில் பண்ற காரியமா?'.. 'இப்ப என்ன ஆச்சு?'.. இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி!