பதற்றத்தில் பயந்து நின்ன மான்.. ஒண்ணுமே பண்ணாம Casual -ஆ நடந்து போன புலி... IFS ஆபீசர் பகிர்ந்த வீடியோ!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் சமூக வலைத்தளங்களில் நிறைய நேரம் உலவிடுவதை நாம் கவனித்திருப்போம். அப்படி நேரத்தை நாம் செலவிடும் போது இந்த உலகில் என்ன நடந்தாலும் அதை பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "டிப்ஸ் கிடைக்குமான்னு ஜடேஜாகிட்ட கேட்டேன், அப்ப அவர் சொன்ன பதில்".. மனம்திறந்த ஆஸ்திரேலிய வீரர்!!

அதே போல, இந்த உலகின் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும் அவை வீடியோக்களாகவோ,  செய்திகளாகவோ நிச்சயம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படவும் செய்யும்.

அதிலும் குறிப்பாக ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க வீடியோக்கள் வைரலாகி இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறும். இயல்பாக நடைபெறும் விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்டு நடக்கும் போது அவை வைரலாகி இணையவாசிகள் மத்தியில் கவனம் பெறவும் செய்யும்.

அப்படி வைரல் ஆகும் விஷயங்கள், விநோதமாகவோ, அதிர்ச்சி கலந்தோ, வேடிக்கையாகவோ அல்லது எமோஷனல் கலந்தபடி என வகை வகையாக இருக்கும். இந்த நிலையில் தற்போதும் அப்படி ஒரு வீடியோ குறித்த செய்தி தான் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து பலரது லைக்குகளை பெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

சைலண்டா நடந்த புலி

பொதுவாக காடுகளில் ஏராளமான மிருகங்கள் சுற்றித் திரியும் சூழலில், சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பல மிருகங்களும் அதிகம் பலத்துடன் வலம் வரும். அதில் ஒவ்வொரு விலங்குகளும் மற்ற விலங்குகளை வேட்டையாடி சாப்பிடவும் செய்யும்.

அப்படி இருப்பதில், சிங்கம் மற்றும் புலி ஆகிய விலங்குகளை கண்டு மற்ற பல விலங்குகள் அஞ்சி பதுங்கவும் செய்யும். தொலைக்காட்சிகளில் கூட மான் உள்ளிட்ட பல விலங்குகளை புலி வேட்டை ஆடுவதை பலரும் கவனித்திருக்கக் கூடும். அப்படி இருக்கையில், தற்போது புலி ஒன்று மானை எதுவும் செய்யாமல் விட்டது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

புலியின் குணம் இது தான்..

இது தொடர்பான வீடியோ ஒன்றை IFS ஆபீசர் ரமேஷ் பாண்டே என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், புலி ஒன்று பாதை ஒன்றில் படுத்து கிடக்கின்றது. அப்போது புலியிடம் இருந்து சில அடி தொலைவில் மான் ஒன்று நடந்து செல்கிறது. அடுத்த சில வினாடிகள் கடந்ததும் அந்த புலி மெல்ல எழுந்து நடக்கிறது.

இதனைக் கண்டதும் மான் சற்று பதற்றம் அடைவது தெரியும் சூழலில், புலி எதையும் செல்லாமல் அப்படியே மெல்ல நடக்கிறது. இந்த வீடியோவை IFS ஆபீசர் ரமேஷ் பாண்டே பகிர்ந்துள்ள சூழலில், புலியின் குணம் குறித்தும் அந்த வீடியோவில் சில விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | பட்டமளிப்பு மேடையில் ரஞ்சிதமே ஸ்டைலில் Flying Kiss கொடுத்த மாணவர்.. ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு!!

TIGER, DEER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்