‘கல்யாணமான பெண்ணுக்கு காதல் கடிதம்’.. மளிகைக் கடைக்காரர் மீது வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தண்டனை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணம் ஆன பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்த நபருக்கு நீதிமன்றம் பரபரப்பு தண்டனை வழங்கியுள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மளிகைக் கடைக்காரர் ஒருவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கடந்த 2011-ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ண தவாரி என்ற மளிகைக்கடை உரிமையாளர், பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த 45-வயது திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்.

இதைப் அப்பெண் ஏற்கவில்லை என்றதும் மறுநாள் அவரை நோக்கி ஆபாசமாக செய்கைகளை செய்து காட்டி, காதல் கடிதத்தில் எழுதியிருப்பதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நிதிபதிகள், பெண்ணின் கண்ணியம் என்பது விலை மதிப்பில்லா நகை போன்றது. திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்திருந்தாலும், கவிதைகள் வடித்திருந்தாலும், அது பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்தான். சில நேரங்களில் சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது கற்களை வீசியது கண்டித்தக்கது எனக் கூறிய நீதிபதிகள், ஸ்ரீகிருஷ்ண தவாரிக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்பளித்தனர்.

இதனை அடுத்து அப்பெண், தனது மளிகைக் கடையில் பொருட்களை கடனாக வாங்கிவிட்டு பணம் தரவில்லை என்றும் அதை கேட்டதும் தன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளதாகவும் ஸ்ரீகிருஷ்ண தவாரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, தண்டனையை ஓராண்டாக குறைத்தார். ஆனால் அபராதத்தொகை 90,000 ஆயிரமாக உயர்த்தி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்