அப்டியே 'சுட்டு' தள்ளிருங்க... 50 ஆயிரத்தை 'அளித்து' போலீசுக்கே.... 'இன்ப' அதிர்ச்சி கொடுத்த குட்டிப்பையன்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும் வைரஸின் தீவிரம் குறைந்த பாடில்லை. இதனால் நாட்டின் பொருளாதார நிலை கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய வேண்டி பல தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அரசுக்கு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கபீர் என்ற மூன்று வயது சிறுவன் மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். ஆனால் இந்த ஐம்பதாயிரத்தை சேகரிக்க சிறுவன் செய்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. தனது தாயின் உதவியால் கப் கேக்குகளை செய்து தொழில் முனைவர் ஒருவர்க்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். கபீரின் குறிக்கோளை பாராட்டிய அந்த தொழிலதிபரும் 10 ஆயிரத்திற்கு பதிலாக 50 ஆயிரம் காசோலையை வழங்கியுள்ளார்.
அந்த பணத்தை அப்படியே மும்பை காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்துள்ளார் அந்த சிறுவன். மூன்று வயது சிறுவனின் செயலால் நெகிழ்ந்து போன மும்பை போலீசார் இது குறித்த வீடியோ ஒன்றை தங்களது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து வெளியிட்டுள்ளனர்.
அந்த காசோலை ஒன்றுடன் கடிதம் ஒன்றையும் சிறுவன் கபீர் அளித்துள்ளார். அந்த கடிதத்தில் 'போலீஸ் அங்கிள். எங்களை கவனமாக பார்த்து கொண்டதற்கு நன்றி. தயவு செய்து உங்கள் கையிலிருக்கும் துப்பாக்கியை எடுத்து கொரோனா வைரஸை சுட்டி வீழ்த்தி விடுங்கள். நான் எனது நண்பர்களை அப்போது தான் பார்க்க முடியும். இந்த பணத்தை மருந்துகள் மற்றும் லாலிபாப் வாங்க பயன்படுத்தி கொள்ளுங்கள்' என எழுதியுள்ளார். கூடவே ஸ்வீட் பாக்ஸ் ஒன்றையும் சிறுவன் கபீர் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவோட 'இந்த' பகுதிகளுக்கு... 'லாக்டவுன்' ரொம்ப நாள் நீட்டிக்கணும் இல்லன்னா... 'எச்சரிக்கும்' உலக சுகாதார அமைப்பு!
- நாட்டிலேயே 'இந்த' 8 நகரங்களில் தான் 'ரொம்ப' அதிகம்... 'சென்னை'க்கு எத்தனாவது எடம்?
- 'சிகிச்சை' பெறும் கொரோனா நோயாளிகளுக்கு 'அருகிலேயே' உயிரிழந்தவர்களின் 'உடல்கள்'... வைரலாகும் வீடியோவால் 'அதிர்ச்சி'...
- ‘மக்கள் கூட்டமாக திரள்வது பேராபத்தை ஏற்படுத்தும்’.. மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட மாநில அரசு..!
- 'லாக்டவுனுக்கு' முன்பே கிளம்பிய 'அறைத்தோழிகள்!'.. அபார்ட்மெண்ட்டில் 'அழுகிய' நிலையில் கண்டெடுக்கப்பட்ட 'இளம்' விமான பணிப்பெண்ணின் 'சடலம்!'
- "55 வயசுக்கு மேல இருக்கும் போலீஸ்காரங்களுக்கு சம்பளத்துடன் லீவு!" - மும்பை காவல்துறையின் சமயோஜித அறிவிப்பு!
- நாட்டிலேயே 'இந்த' 5 நகரங்களில் தான்... 'கொரோனா' பரவல் அதிகம்: உள்துறை அமைச்சகம்
- 'இதுவரை' இல்லாத அளவுக்கு... 'இன்று' ஒரே நாளில் '778 பேருக்கு' கொரோனா... மொத்த பாதிப்பு 6000ஜக் கடந்த 'மாநிலம்'...
- ஊரடங்கால் 'இந்தியாவில்' இப்படியொரு மாற்றமா?... 'நம்பமுடியாத' உண்மை... 'நாசா' வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!
- ‘கொரோனா தொற்று’... ‘மிக மோசமான நிலையில் உள்ள நகரங்கள் இவைதான்’... ‘தீவிரமடையும் கட்டுப்பாடுகள்’!