'என் மனைவிய அடக்கம் பண்ணனும், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க...' 'கதவை மூடிய உறவினர்கள்...' போலீசார் செய்த மகத்தான காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா அச்சம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இறந்த மனைவியை அடக்கம் செய்ய தவித்தவருக்கு மூன்று போலீசார் உதவிய சம்பவம் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
66 வயதான ஜஸ்பால் சிங் மனைவி சுதா சிங் மற்றும் மாற்றுத்திறனாளியான 22 வயது மகனுடன் டெல்லியின் ஜெயித்பூரின் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சுதா சிங்கிற்கு கடந்த ஏழு மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். அதையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுப்படுத்த சுதா காலையில் எழுந்திருக்கவில்லை.
அதிர்ச்சியடைந்த ஜஸ்பால் தன் மாற்றுத்திறனாளி மகனை வைத்து ஒன்னும் செய்ய முடியாமல், அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவினர்களை உதவிக்கு அழைத்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக ஜஸ்பாலுக்கு யாரும் உதவாமல் வீட்டுக் கதவை மூடியுள்ளனர்.
மன வேதனையடைந்த ஜஸ்பால் சிங் என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் இருந்த ஜெயித்பூர் காவல் நிலையத்துக்கு சென்று நடந்தவற்றைக்கூறி, மனைவியின் இறுதி சடங்கிற்கு உதவி கேட்டுள்ளார்.
ஜஸ்பால் சிங்கின் நிலைமையை உணர்ந்த காவல் அதிகாரியின் உத்தரவின் பேரில் கான்ஸ்டபிள்கள் சுனில், பர்வீன், தர்மேந்திரா, மற்றும் ராகுல் ஆகியோர் ஜஸ்பாலுக்கு உதவினார். மேலும் காவலர்கள் தான் ஜஸ்பால் மனைவியின் இறுதி சடங்குகளுக்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
பின்பு இறந்த சுதாவின் சடலத்தை ஜஸ்பால் உள்ளிட்ட மூன்று காவல் அதிகாரிகள் சேர்ந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ள தகன மைதானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரும் காவலர்களின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 450 வீடியோக்கள்.... 'முக்கிய' பிரமுகர்களின் 'வீட்டு' பெண்களையும் விட்டு வைக்காத காசி... அதிர்ந்து போன போலீசார்!
- பாதி 'இதுலயே' சரியாகிருச்சு... கொரோனாவை 'வென்று' டூட்டிக்கு திரும்பிய 'போலீஸ்' உருக்கம்!
- வேணாம் விட்ருன்னு எவ்வளவோ 'கெஞ்சினாங்க'... ஆனா நாங்க கேட்கல...மருமகன் போலீசில் 'கண்ணீர்' வாக்குமூலம்!
- 'சிதைச்சு' போட்டுட்டு போய்ட்டாங்க... மோட்டார் சைக்கிளில் வந்த 'கள்ளக்காதல்' ஜோடிக்கு... 'மதுரை' அருகே நிகழ்ந்த பயங்கரம்!
- ‘ஒரே நைட்டில் 19 கொலை’.. ‘ஹிட்லர்’ ஸ்டைலை பாலோ பண்ணேன்.. போலீஸை மிரளவைத்த இளைஞர் வாக்குமூலம்..!
- 'மகள்களை' வீடியோ எடுத்து... அம்மாக்களை 'மிரட்டிய' காசி... வெளியான 'பரபரப்பு' தகவல்!
- ‘சித்தியுடன் தகாத உறவு’.. கண்டித்த அத்தைக்கு ‘கத்திக்குத்து’.. சென்னையை அதிரவைத்த கொலையின் பகீர் பின்னணி..!
- படுக்கையறையில் 'பிணமாக' கிடந்த மனைவி... 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து 'கணவர்' தற்கொலை... 'அடுக்கடுக்காக' காத்திருந்து அதிர்ச்சிகள்!
- 'டேய் நீ பண்றது பெரிய தப்பு'... 'அது என்னோட தம்பி மனைவி'... 'ஆத்திரத்தில் இளைஞர் செய்த பாதகம்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்...' 'லூடோ விளையாட என்ன சேர்த்துக்கல...' அக்காவையும் சேர்த்து போலீசில் புகார் கொடுத்த சிறுவன்...!