‘இங்க எல்லாருக்கும் தடுப்பூசி போட்டாச்சு’!.. முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்ட இந்தியாவின் ‘முதல்’ கிராமம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால், அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2 கோடியே 89 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சத்து 49 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு தன்னார்வ அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில், இந்தியாவில் கிராம புறங்களிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரியவந்தது. அதில், கடந்த மே மாதம் 53 சதவீத நோய் தொற்று கிராமங்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மாநில அரசு சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் கொரோனா இல்லாத கிராமத்துக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்தார். இதுபோல் கொரோனா பரவலை தடுக்க பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முறமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள வேயான் என்ற கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் கிராமம் என்ற பெருமையை வேயான் கிராமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்