பெட்ரோல் விலை ஒரே நாளில் 25 ரூபாய் குறைப்பு.. ஆனால் ஒரு கண்டிசன்.. நிபந்தனை விதித்த மாநில அரசு
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து சென்றுள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில அரசு பெட்ரோல் விலையை குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் இந்த பெட்ரோல் குறைப்பு அமலுக்கு வரும் என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ‘பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் பெட்ரோல் விலையை குறைக்க முடிவு செய்துள்ளோம்.
அதன்படி இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு வரும் ஜனவரி 26, 2022-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசுகள் ஒப்புக்கொள்ள வேண்டும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் மாநில அரசுகளோ, தங்களுக்கு இருக்கும் ஒரு சில வரிகளில் பெட்ரோல் வரியும் ஒன்று என்பதால் கொண்டுவர மறுக்கின்றன. மத்திய அரசும் பெட்ரோல் மீது அதிக வரியை விதித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி கணிசமாக உயர்த்தப்பட்டது. செஸ் வரிகளும் பெட்ரோல் டீசல் மீது உள்ளது. மாநில அரசு மற்றும் மத்திய அரசு இரண்டு தரப்பும் வரிகளை விதிப்பதால் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் குறைந்தாலும் பெரிய அளவில் குறைவது இல்லை. கடைசியாக தீபாவளிக்கு முன்பு பெட்ரோல் விலையை லிட்டருக்கு மத்திய அரசு 5ரூபாய் குறைத்தது. டீசல் விலையை 10 ரூபாய் குறைத்தது.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தொடர்ந்து 55-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பெட்ரோல், டீசல் வண்டியா செல்லாது…செல்லாது..! உங்களயெல்லாம் ஊரவிட்டு ஒதுக்கி வச்சாச்சு..! என்னங்க புது ரூல்ஸா இருக்கு..?
- 'யாரா இருந்தாலும் வெயிட் பண்ணனும்'... 'ஹலோ, இந்த பென்ட்லி கார் யாரோடது தெரியுமா'?... '7 மணி நேரம் காத்திருப்பு'... பெட்ரோல் பங்கில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- இனிமேல் நமக்கு 'சைக்கிள்' தாங்க சரிப்பட்டு வரும்...! சன்னி லியோன் 'ஷேர்' செய்த பதிவு...! - டிரெண்டிங் செய்யும் நெட்டிசன்கள்...!
- 'இன்னைக்கும் கண்டிப்பா திருட வருவாங்க...' 'அவங்கள பிடிக்கவும் முடியாது...' - திருடர்களுக்காக பொதுமக்கள் 'கதவில்' எழுதி வைத்த வாசகம்...!
- 'பைக்கை சட்டென நிறுத்திய இளைஞர்கள்'... 'மச்சி அங்க பாரு'... 'ஆடையின்றி சாலையில் போன உருவம்'... 'ஏலியனா'? வைரலாகும் பகீர் வீடியோ!
- அய்யயோ...! அவரு வர்றத பாருங்களேன்...! 'ஆக்சிஜன் மாஸ்கோடு வேலைக்கு வந்த வங்கி ஊழியர்...' ஏன் இப்படி வந்தாரு...? - அதிகாரிகள் சொன்ன காரணம்...!
- அந்த நாட்டுல கரும்ப வச்சு 'அத' உற்பத்தி பண்றாங்களே...! 'அதே மாதிரி இங்கையும் பண்ணுவோம்...' - பரப்புரையில் சீமான் அதிரடி...!
- கேக் வெட்டி மாப்பிள்ளையின் ‘ஃப்ரண்ட்ஸ்’ கொடுத்த கிப்ட்.. கல்யாண மண்டபத்தை ‘கலகலக்க’ வைத்த சம்பவம்.. அப்படி என்ன ஸ்பெஷல் கிப்ட் அது..?
- 'நம்ம பேக்கரியில கேக் வாங்க...' 'ஆட்கள எப்படி வரவைக்குறதுன்னு யோசிச்சப்போ தான்...' 'இந்த ஐடியா தோணுச்சு...' - வேற லெவல் ஆஃபர் அறிவித்த பேக்கரி...!
- 'மேன் ஆஃப் தி மேட்ச்'க்கு... 'இப்படி ஒண்ணு பரிசா கெடைக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...' - சிரிச்ச முகத்தோடு வாங்கிட்டு போன வீரர்...!