'சீக்கிரமே இருக்கு அடுத்த ஷாக்?!!'... 'நியூ இயருக்கு பின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிளான் இதுதான்!'... 'வெளியான புதிய தகவல்!!!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நியூ இயருக்கு பின் அடுத்தடுத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக கடுமையான போட்டியின் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தையும் மறந்து, பல சலுகைகளை அள்ளி வழங்கியதால் பெரும் நஷ்டத்தினை சந்தித்தன. இதையடுத்து தற்போது அந்நிறுவனங்கள் அதற்கும் சேர்த்து கட்டணத்தினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனினும் தற்போது வரையிலுமே அந்நிறுவனங்கள் பல காரணங்களால் அழுத்தத்தில் உள்ளதால் மீண்டும் ஒரு கட்டண அதிகரிப்புக்கு அவை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதே அதிக கட்டணம் இருப்பதாக வாடிக்கையாளர்கள் பலரும் கூறிவரும் நிலையில், வரும் புத்தாண்டில் அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது எனவே கூறப்படுகிறது. அதாவது வரும் புத்தாண்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான எகனாமிக்ஸ் டைம்ஸின் அறிக்கையின்படி, வோடபோன்-ஐடியா எனும் வீ நிறுவனம் (Vi) மற்றும் ஏர்டெல் ஆகியவை புதிய ஆண்டில் தங்கள் கட்டண விலையை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல்லுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோவும் கட்டணத் திட்ட விலைகளை பற்றி யோசிக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டைப் போலவே, வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் புதிய கட்டணத் திட்டங்களை அறிவிக்கலாம். மேலும் ஆகஸ்ட் மாதத்திலேயே CNBC யின் ஒரு அறிக்கை, கடந்த ஆண்டின் கட்டணத் திட்டங்கள் 10-40 சதவீதம் அதிக விலை கொண்டவை எனவும், இப்போது ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை கட்டணத் திட்டங்களை மீண்டும் விலை உயர்ந்ததாக மாற்றத் தயாராகி வருவதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்