'இந்தியாவில் இருக்கும் உலகின் பணக்கார கிராமம்'... 'வங்கி டெபாசிட் மட்டும் இத்தனை கோடியா'?... அசரவைக்கும் பின்னணி காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்த கிராமத்தில் வசித்து வரும் குடும்பத்தினரின் மொத்த டெபாசிட் தொகை ரூ.5,000 கோடியாகும்.
குஜராத்தின் மாதாபர் கிராமம் உலகிலேயே பணக்கார கிராமமாகத் திகழ்கிறது, இது குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் அப்படி என்ன சிறப்பு, ஏன் உலகிலேயே பணக்கார கிராமம் என அழைக்கப்படுகிறது என்பதற்கு பல்வேறு பின்னணி காரணங்கள் உள்ளது.
இந்த கிராமத்தைப் பொறுத்தவரை இங்கு 17 வங்கிகள் உள்ளன. சுமார் 7,600 வீடுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் குடும்பத்தினரின் மொத்த டெபாசிட் தொகை ரூ.5,000 கோடியாகும். அதோடு தனிநபர் சராசரி டெபாசிட் ரூ.15 லட்சமாகும். 17 வங்கிகளைத் தவிர இங்குப் பள்ளிகள், மருத்துவமனைகள், ஏரிகள், கல்லூரிகள், அணைக்கட்டுகள், கோயில்கள் அனைத்தும் உள்ளன. பசுக்கள் வளர்ப்பிடமும் உண்டு.
இந்த மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் அதிகம் பேர் வசித்து வருகிறார்கள். அதிலும் வரலாற்று ரீதியாக, பல காலமாக கை வேலைப்பாடுகள், கட்டுமான பணிகள் செய்யும் மக்கள் வசிக்கும் மாவட்டம் ஆகும். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழில் கட்டுமான துறை, டைல்ஸ் பதிப்பது போன்ற இன்டிரியர் வேலைகள்தான்.
இந்த கிராமத்தை ஏன் உலகிலேயே பணக்கார கிராமம் எனக் கூறுகிறார்கள் என்றால், இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் வங்கியில் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் இந்த கிராமத்தைப் பணக்கார கிராமம் என்று வரையறுக்கிறார்கள். மேலும் இந்த கிராமத்தில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் அயல்நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள் என்று வசிக்கின்றனர், பெரும்பாலும் படேல் சமூகத்தினர்தான் இங்கு வசிக்கின்றனர், இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் 65% மக்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான். இதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் இங்குப் பணத்தை வந்து கொடுக்கிறார்கள். இதனால் இந்த கிராமத்து மக்களிடையே பணப் புழக்கம் என்பது அதிகமாகவே காணப்படுகிறது.
மற்ற செய்திகள்