‘இங்க யாருக்குமே கொரோனா பாதிப்பு இல்லை’!.. இந்தியாவுக்கே ஒரு ‘முன்மாதிரி’ கிராமம்.. சாதித்தது எப்படி..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சுயக்கட்டுப்பாட்டை கடைபிடித்து ஊருக்குள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல், ஆந்திராவை சேர்ந்த கிராமம் ஒன்று இந்தியாவுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜி கொண்டுரு மண்டலத்தில் துக்கிரிலப்பாடு (Duggiralapadu) என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மக்கள் அடிக்கடி வெளியே செல்வதற்கும், வெளியூர் மக்கள் இக்கிராமத்துக்கு வருவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அனைவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியாமலோ, சானிடைசர் எடுத்துக் கொள்ளாமலோ செல்வதில்லை.

மேலும் சுகாதாரப் பணியாளர்கள் வாரத்துக்கு இரண்டு முறை கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொள்கின்றனர். அதேபோல் வாரத்துக்கு இரண்டு முறை வடிகால்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்பதற்காக திருவிழா, நிகழ்ச்சிகள், சடங்குகள் என எதுவும் தற்போதைக்கு நடத்த வேண்டாம் என கிராம மக்கள் கூடி முடிவெடுத்துள்ளனர். இதற்காக அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் தங்களது உறவினர் விசேஷங்களுக்கு கூட இந்த கிராம மக்கள் செல்வதில்லை.

இதுகுறித்து தெரிவித்த அக்கிராம மக்கள், ‘எங்கள் கிராமத்தில் 8 கடைகள் உள்ளன. கூட்டம் கூடுவதை தவிர்க்க, ஒரு கடையில் குறிப்பிட்ட நாளில் ஒரு வார்டு மக்கள் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்’ என கூறுகின்றனர். இதுபோன்ற சுயக்கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருவதால், அக்கிராமத்தில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்