“யாரு சாமி இவங்க” .. ஓடும் ரயில்ல ஓட்டைய போட்டு எண்ணெயை ஆட்டைய போட்ட ஆசாமிகள்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து சில திருடர்கள் எண்ணையை திருடும் வீடியோ வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | இட்லி தெரியும் அதென்னப்பா ஃபிட்லி?.. ஒன்னு 90 ரூபாயாம்.. உணவு பிரியர்களிடையே வைரலாகும் வீடியோ..!

பீகார் மாநில தலைநகர் பாட்னா அருகில் உள்ள பிஹ்டா பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இங்கு உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சரக்கு ரயில் செல்லும் போது அதிலிருந்து எண்ணெயை வாளி வாளியாக சிலர் எண்ணெயை திருடும் வீடியோ வெளியாகி பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. கையில் பெரிய வாளியுடன் ஓடும் இந்த திருடர்கள் ரயிலில் இருந்து எண்ணெயை நிரப்பி எடுத்துச் செல்கின்றனர்.

இந்த சரக்கு ரயில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) எண்ணெய்க் கிடங்கிற்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ரயில் அதன் இலக்கை அடைவதற்கு முன்னர் திருடர்கள் திட்டமிட்டு இந்த செயலில் இறங்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

பீகார் மாநிலத்தில் இப்படியான வினோத திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. முன்னதாக பங்கா மாவட்டத்தில் 2 கிமீ நீளமுள்ள சாலை மர்மமான முறையில் காணாமல் போனது. கரோனி கிராமத்தில் வசிப்பவர்கள் அருகிலுள்ள கிராமத்துடன் தங்களை இணைக்கும் ஒரே சாலை தடயமே இல்லாமல் போய்விட்டதாக காவல்துறையில் புகார் அளித்தனர். இரு கிராமங்களை இணைக்கும் தார் சாலையை மொத்தமாக பெயர்த்து எடுத்துச் சென்றிருந்தனர் திருடர்கள்.

அதேபோல, பெகுசராய் என்ற இடத்தில், டீசல் ரயிலையே மர்ம நபர்கள் திருடிச் சென்றது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கெல்லாம் உச்சம் வைத்தாற்போல, கடந்த ஏப்ரல் மாதத்தில் அமியவர் கிராமத்தில் 45 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலத்தை திருட்டு கும்பல் திருடிச் சென்றது. இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், ஓடும் ரயிலில் இருந்து எண்ணெயை சிலர் திருடும் வீடியோ வெளியாகியிருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

 

Also Read | காதலனை மறக்க மந்திரவாதியிடம் அழைத்துப்போன பெற்றோர்.. கடைசியில மகள் வச்ச டிவிஸ்ட்..!

BIHAR, THIEVES, STEAL, OIL, TRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்