"இதுதான் தொழில் பக்தி போல?.. கோவிலில் திருட போறதுக்கு முன்னாடி.. நபர் செஞ்ச காரியம்!!.. வைரல் சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் குறித்து நாம் சோஷியல் மீடியாவில் நேரம் உலவிடும் போது நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Advertising
>
Advertising

இதில் அதிர்ச்சிகரமான, வினோதமான அல்லது நம்மை மனம் நெகிழ வைக்கக் கூடியது என இப்படி வகை வகையான விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும் .

அதே போல, இன்றைய காலகட்டத்தில் பல இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறும் சூழலில், இதுகுறித்த தகவலும் மக்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணும். ஆனால், அதே வேளையில், இப்படி நடக்கும் திருட்டு சம்பவங்கள் குறித்து துப்பு துலக்க சிசிடிவி காட்சிகள் பெரிய அளவில் உதவியும் செய்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறிய திருட்டு சம்பவமும் இது தொடர்பாக உள்ள பின்னணியும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பனிஹர் என்னும் கிராமம். இந்த கிராமத்தில் ஜெயின் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த கோவிலில் தான் இரவு நேரத்தில் திருட்டுச் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. ஜெயின் கோவிலில் இரவு நேரம் நுழைந்த திருடன், பொருட்களை திருடுவதற்கு முன்பாக, பய பக்தியுடன் சாமி சிலைகளை வணங்குகிறார்.

இதனைத் தொடர்ந்து தான், கோவிலில் இருந்து ஆறு உலோக சிலைகள், மற்றும் இரண்டு லட்ச ரூபாய் வரை உண்டியல் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பரபரப்பை உண்டு பண்ணியுள்ள நிலையில்,  இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிலில் திருடச் சென்ற திருடன் அங்கு இருந்த சாமி சிலைகளை வணங்கி விட்டு பின் திருடி சென்றுள்ள சம்பவம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

THIEF, THEFT, CCTV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்