திருடப்போன இடத்துல குத்தாட்டம்.. சிசிடிவி கேமரா பதிவை பார்த்து கடுப்பான போலீஸ்.. வைரலான வீடியோ.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹார்டுவேர் கடை ஒன்றில் நுழைந்த திருடன் நடனமாடிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

திருட்டு

உத்திர பிரதேச மாநிலம் சந்தாவுளி பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்திவருகிறார் அன்ஷு சிங். இவர் கடந்த 16 ஆம்  தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அடுத்தநாள் காலை கடைக்கு போன அன்ஷு சிங்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் உள்ளே பொருட்கள் கலைந்து கிடந்தவுடன் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை அறிந்த சிங், உடனடியாக தனது கல்லா பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார். அதில் இருந்த ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த சிங் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்த அன்ஷு சிங்கிற்கு தனது கடையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது ஞாபகத்திற்கு வந்திருக்கிறது. அதில் அவர் கண்ட காட்சி அவரை மேலும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

நடனம்

அன்ஷு சிங் நினைத்தது போலவே, அதிகாலை நேரத்தில் முகமூடி அணிந்த ஆசாமி ஒருவர் கடைக்குள் நுழைவது அந்த கேமராவில் பதிவாகியிருக்கிறது. அதன் பின்னர் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையன் திருடும்போது மேலே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்திருக்கிறார்.

அதன்பிறகு திடீரென பணத்துடன் நடனம் ஆட துவங்கிய அந்த கொள்ளையன், சற்று நேரம் கழித்து அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். இதனை அடுத்து அன்ஷு சிங் காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். திருடப்போன இடத்தில் தன்னை மறந்து நடனம் ஆடிய ஆசாமியை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

காவல்துறையில் அன்ஷு சிங் அளித்த புகாரில் கடையில் இருந்த அனைத்து பணத்தினையும் கொள்ளையன் எடுத்துச் சென்றதோடு, கடையில் இருந்த ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல கடந்த 2018 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கொள்ளையடிக்கச் சென்ற கும்பல் ஒன்று, அங்கிருந்த சிசிடிவி கேமராவை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு நடனம் ஆடிய சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

UP, THEFT, DANCE, உத்திரபிரதேசம், திருட்டு, நடனம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்