'சமர்ப்பணம்... சமர்ப்பணம், கொரோனாவுக்கே சமர்ப்பணம்...' 'பால் கொள்முதல் ஆகாத விரக்தியில்...' விவசாயிகள் செய்த அதிர்ச்சி காரியம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பால் கொள்முதல் ஆகாததால் விவசாயிகள் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பரவி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிக்கொடி விவசாயிகள் பால் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.  கொரோனா வைரஸ் அச்சம் நிலவும் இந்நிலையில் எவ்வளவு விலை குறைத்து விற்றாலும், உற்பத்தி ஆகும் பாலை யாரும் கொள்முதல் செய்ய வராததால் விவசாயிகள் அதிருப்தி அடைத்துள்ளனர்.

இதையடுத்து விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து, கொரோனாவுக்கு சமர்ப்பணம் சமர்ப்பணம் என்று கூறியவாறு 1500 லிட்டர் பாலை வாய்க்காலில் ஊற்றிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் இதுவரை 101 மக்கள் கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ளனர் இதில் 3 மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MILK CANAL

மற்ற செய்திகள்