கடலில் ‘மூழ்கும்’ அபாயத்தில் இந்தியாவின் 12 நகரங்கள்.. நாசா ‘அதிர்ச்சி’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் 12 நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நாசா எச்சரிக்கை செய்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகிறது. உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (IPCC) அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. அதில், 2100-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குஜராத் மாநிலத்தில் கண்ட்லா (1.87 அடி), ஒக்ஹா (1.96 அடி), பவுநகர் (2.70 அடி), மகாராஷ்டிராவின் மும்பை (1.90 அடி), கோவாவின் மோர்முகாவ் (2.06 அடி), கர்நாடகாவின் மங்களூர் (1.87 அடி), கேரளாவின் கொச்சி (2.32 அடி), ஒடிசாவின் பரதீப் (1.93 அடி), கொல்கத்தாவின் கிதிர்பூர் (0.49 அடி), ஆந்திராவின் விசாகப்பட்டினம் (1.77 அடி), தமிழ்நாட்டின் சென்னை (1.87 அடி), தூத்துக்குடி (1.9 அடி) ஆகியவை நாசா வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இது தற்போதைய கால நிலையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாறும் பட்சத்தில் கடல்நீர் மட்டம் உயரும் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று நாசா எச்சரிக்கை செய்துள்ளது. மனிதர்கள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இதற்கு காரணம் என நாசா தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இனி இயல்பு வாழ்க்கையே இப்படிதான் இருக்க போகுது.. உலக நாடுகளுக்கு ‘எச்சரிக்கை’ மணி அடித்த IPCC..!
- ‘3 வருசம் 3,800 கிமீ’.. கடலில் மிதந்து வந்த பாட்டில்.. உள்ளே இருந்த ஒரு துண்டுச்சீட்டு.. என்ன எழுதி இருந்தது..?
- 'இது ஒரு சாதாரண பொருளா தெரியல...' 'எனக்கென்னமோ டவுட்டா இருக்கு...' 'வலையில் சிக்கிய மர்மப்பொருள்...' - 'செக்' பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!
- 'மத்த எந்த உயிரினத்துக்கும் இல்லாத ஒரு விஷயம் இருக்கு...' 'இப்படி ஒண்ண பார்த்ததே இல்ல...' - கடற்கரையில் ஒதுங்கிய அதிசய உயிரினம்...!
- 'எங்க இருந்து வந்துச்சுன்னே தெரியல...' ஒருவேளை அதுவா இருக்குமோ...?! - கடற்கரையில் விழுந்த உலோக பந்து...!
- 'இனி தங்கம் கடல்ல மிஸ் ஆக வாய்ப்பில்ல...' 'கடலுக்கடியில தங்கம் தொலையாம இருக்க எடுத்த முன்னெச்சரிக்கை...' - கடலில் அரசியல் கட்சி பிரமுகர் செய்த 'தங்க' நீச்சல்...!
- 'தண்ணீரில் மிதந்த கிழிந்த ஜீன்ஸ், இரும்பு துண்டுகள்...' 'மீனவர் அளித்த தகவல்...' - மாயமான விமானம் குறித்த அதிர்சிகர தகவல்கள்...!
- பார்க்க எவ்ளோ கியூட்டா இருக்கு...! 'ஆனா இது மீன் இல்ல...' - வலையில் சிக்கிய அரிய வகை உயிரினம்...!
- ‘நடுக்கடலில் திடீரென ரிப்பேர்’.. மூழ்கிய படகின் உச்சியில் 2 நாட்களாக நின்ற நபர்.. மீனை சாப்பிட்டு உயிர் பிழைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..!
- "பீச் மண்ணுல ஏதோ மின்னுது?!!"... 'ஓடிச்சென்று பார்த்தபோது கிடந்த தங்கமணிகள்!!!'... 'நிவர் கொடுத்த இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப்போன மக்கள்!!!'...