‘இந்த’ மாதிரியான பாஸ்வேர்டுகள் வச்சிருக்கீங்களா? நீங்கதான் டார்கெட்… கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க..! எச்சரிக்கும் போலீஸ்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் குறித்த பட்டியல் ஒன்றை மும்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இந்த பாஸ்வேர்டுகள் எல்லாம் ஹேக்கர்களால் எளிதாக ஹேக் செய்யப்படும் என்றும் மும்பை போலீஸார் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இதனால் கடினமான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தவும் மக்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
‘123456’ என பாஸ்வேர்டு வைத்திருக்கிறீர்களா? எளிதாக ஞாபகம் வைத்திருக்கும்படியான பாஸ்வேர்டுகள் இருந்தால், நீங்க தான் ஹேக்கர்களின் முதல் டார்கெட். அதனால், குறிப்பிட்ட பாஸ்வேர்டுகளை எப்போதுமே பயன்படுத்தக் கூடாது என ஒரு பட்டியலை மும்பை போலீஸார் வெளியிட்டு அறிவுறுத்தி உள்ளனர். எளிமையான நம்பர்கள் உடன் பாஸ்வேர்டுகள் வைத்திருந்தால் அதை ஒரே விநாடியில் ஹேக் செய்துவிடலாமாம்.
இந்தியாவின் மிகவும் பிரபலமான பாஸ்வேர்டுகளாக, ‘123456’, ‘1234567’, ‘12345678’, ‘123456789’, ‘1234567890’ ஆகிய பாஸ்வேர்டுகளை இந்தியர்கள் அதிகமாகவே பயன்படுத்துகிறார்களாம். மேலும், NordPass என்னும் ஆய்வு நிறுவனம் பாஸ்வேர்டுகள் குறித்து தொடர் ஆர்வுகள், பாஸ்வேர்டு மேலான்மை ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் அடிப்படையில் இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்தும் பாஸ்வேர்டு ஆக ‘password’ என்ற வார்த்தை தான் இருக்கிறதாம். மேலும், “querty”, “xxx”, “iloveyou”, “welcome” ஆகிய பாஸ்வேர்டுகள் தான் டாப் 5 பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம். வலிமையான பாஸ்வேர்டுகளை வைக்கும்படி பல முறை அறிவுறுத்தப்பட்டாலும் இன்றும் இளம் தலைமுறையினரே இது போன்ற எளிய பாஸ்வேர்டுகளைத் தான் இன்னும் பயன்படுத்தி வருகிறார்களாம்.
மேலும், கடவுள் பெயர்களைக் கொண்ட பாஸ்வேர்டுகளும் எளிதாக ஹேக் செய்யப்பட்டுவிடலாம் என்றும் கூறப்படுகிறது. Krishna, sairam, omsairam, saibaba, ganesh போன்ற கடவுள் பெயர்களால் ஆன பாஸ்வேர்டுகளும் இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல், உங்கள் பெயரையே பாஸ்வேர்டுகளாக வைத்திருந்தாலும் ஹேக் செய்வதற்கு ஹேக்கர்களுக்கு எளிதாக இருக்குமாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மீட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்.. மருத்துவர் வெளியிட்ட தகவல்..!
- VIDEO: ‘இறந்துட்டார்ன்னு நெனச்சுதான் தூக்குனோம்.. அப்பறம்தான் தெரிஞ்சது..!’ மக்கள் மனதை வென்ற இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி பேட்டி..!
- VIDEO: ‘ஓடு... ஓடு.. எப்படியாவது உயிரை காப்பாத்தியாகணும்’!.. கடவுள் மாதிரி வந்த பெண் காவலர்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- எல்லாரும் சேர்ந்து 'நாடகம்' ஆடிட்டாங்க...! 'வெளியாகியுள்ள முக்கிய சிசிடிவி காட்சி...' ஆர்யன் கான் வழக்கில் 'சினிமா திரைக்கதை'ய மிஞ்சும் அளவிற்கு 'அதிரடி' திருப்பம்...!
- ‘யுவராஜ் சிங் திடீர் கைது’!.. என்ன நடந்தது..? கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு..!
- மாயமான மசாஜ் சென்டர் பெண் ஊழியர்கள்!.. “அந்த சூட்கேஸில் இருந்துதான் ‘துர்நாற்றம்’ வருது.. சீக்கிரம் திறந்து பாருங்க”... ‘பூட்டிய வீட்டிற்குள்... மிரண்டு’ போன போலீசார்..!
- 'எதிர்பார்ப்பெல்லாம் வீணா போச்சே'... 'இனிமேல் என்ன நடக்க போகுதோ'... 'உடைந்துபோன ஆர்யன் கான்'... நீதிமன்றம் அதிரடி!
- 'இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்'... 'மகனுக்காக ஆசையா கொண்டு வந்த பர்கர்'... தந்தையை பார்த்ததும் கதறிய ஆர்யன்!
- 'அதிரடி காட்டிய நீதிமன்றம்'... 'நாளைக்கு விசாரணைக்கு வரும் ஜாமின் மனு'... பெரும் எதிர்பார்ப்பில் ஆர்யன் கான்!
- 'அடுத்த டார்கெட் ஷாருக்கான்தான்னு பேச்சு ஓடுச்சு'... 'இன்றோடு முடியும் காவல்'... ஆர்யன் கான் வழக்கில் புதிய ட்விஸ்ட்!