‘அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்!’.. ‘ஆனா இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்!’ - மத்திய அரசு.
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் திரையரங்குகளை திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதித்திருந்த நிலையில் 50% இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதித்து திரையரங்கை திறக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் பார்வையாளர்கள் திரையரங்குக்குள் செல்லும்போது சானிட்டைசர் வழங்கப்பட வேண்டுமென்றும், கவர்களில் அடைக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களை மட்டுமே திரை அரங்குகளுக்குள் விற்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
திரையரங்குக்குள் வரும் பார்வையாளர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் திரைப்பட இடைவேளையின் போது பார்வையாளர்கள் தங்களுடைய இருக்கைகளை விட்டு வெளியில் எழுந்து செல்வதை தவிர்க்க வேண்டும், என்றும் கூட்டத்தை தடுப்பதற்கு டிக்கெட் விற்பனை கவுண்டர்கள் நாள் முழுவதும் திறந்து வைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பார்வையாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகுதான் திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு வேளை கொரோனா அறிகுறி இருந்தால் திரையரங்குக்கு பார்வையாளர் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக திரைப்படம் துவங்கும் முன்பும் இடைவேளையின் போதும் கொரோனா விழிப்புணர்வு படங்களை திரையிட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை ‘ஏர்போர்ட்டில்’.. பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம்... Twin Birds-ன் புதிய கிளை!.. இதன் அசத்தலான அம்சங்கள் என்ன தெரியுமா?
- 'சென்னையில் மீண்டும் 'அதிகரிக்கும்' கட்டுப்பாட்டு பகுதிகள்'... 'ஹாட் ஸ்பாட்டாக உருவாகும் பெருநகரின் முக்கிய ஏரியா'... 'மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய தகவல்!!!'...
- “எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” - ஓபிஎஸ்! .. 'மூத்த அமைச்சர்களுடன் முதல்வரின் ஆலோசனை!'.. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? சூடுபிடிக்கும் அரசியல் களம்!
- 'புல்லட்' பைக்குங்க மட்டும் தான் இவங்க 'டார்கெட்'..." 'சென்னை'ல இருந்து திருடிட்டு போய்... 'விசாரணை'யில் தெரிய வந்த 'அதிர்ச்சி' தகவல்!!!
- 'சென்னையில் நாளை (06-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...
- 8 மாதங்கள் வரை சாப்பிட முடியுமாம்!.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி?.. தென்னக ரயில்வே 'அதிரடி'!.. கொந்தளித்த ரயில் பயணிகள்!
- 'கண்டெய்னர் லாரியை'.. 'மடக்கி மிரட்டுறது ஒரு ரகம்னா.. இன்னொரு ரகம்'.. 'சினிமாவை மிஞ்சும் நிஜ கும்பல்'!
- சென்னையில் 'விறுவிறுப்பாக' உருவாக்கப்படும் குட்டி 'காடுகள்'!.. மாநகராட்சி 'அதிரடி' நடவடிக்கை!.. வெளியான பரபரப்பு தகவல்!
- தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..!
- “இனி நல்லகாலம்தான்.. ஜாதக கட்டம் சொல்லுது!”.. ‘குறி’ சொன்ன ‘சாமியார்!’.. ‘நம்பி’ செய்த காரியத்தால் ‘கம்பி’ எண்ணும் ‘கணவன், மனைவி உள்பட 5 பேர்’!