“வெளி உணவுகளை எடுத்துவர திரையரங்குகள் தடை விதிக்கலாம்.. ஆனால்..” - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
முகப்பு > செய்திகள் > இந்தியாமல்டிபிளக்ஸ்கள் மற்றும் திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் கொண்டு வருவது குறித்த வழக்கு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்திடம் வந்தது.
Also Read | ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவு.. நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
இதன் தொடர்பில் ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றம், வெளி உணவுகளை கொண்டு வருவதற்கு இருந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்தனர். இதனை அடுத்து இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. அதில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி படம் பார்வையாளர்கள் வெளி உணவு மற்றும் பானங்களை கொண்டு செல்வதை திரையரங்கங்கள் தடை செய்யலாம். ஆனால் அதே சமயம், தரமான மற்றும் சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன், குழந்தை அல்லது பிறந்த குழந்தையுடன் வருவோர் குழந்தைகளுக்கு தேவையான உணவை எடுத்துச் செல்ல திரையரங்குகள் அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Images are Subjects to Copyright © to their respective Owners.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு வெளியிட்டுள்ள இந்த தீர்ப்பில், திரையரங்குகள் உரிமையாளரின் தனிப்பட்ட சொத்து என்றும், அதில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிக்க அவர்களுக்கு உரிமை உண்டு எனவும் இது திரையரங்கு உரிமையாளரின் வணிக ரீதியான முடிவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், தியேட்டரில் விநியோகிக்கப்படும் உணவு பொருட்களை வாங்குவது, உண்பது அனைத்தும் பார்வையாளரின் தனி விருப்பம் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
Images are Subjects to Copyright © to their respective Owners.
உச்சநீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு மூலம், இதற்கு முன்னர் மல்டிபிளக்ஸ்கள் மற்றும் திரையரங்குகளில் வெளி உணவு மற்றும் பானங்களை கொண்டு செல்வதற்கு தடையில்லை என உத்தரவிடப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முடிவுக்கு வந்த சிறைவாசம்.. நளினி உள்ளிட்ட 6 பேருக்கு விடுதலை.. உச்சநீதிமன்றம் உத்தரவு..!
- சவுக்கு சங்கரின் சிறைத்தண்டனைக்கு எதிராக போடப்பட்ட வழக்கு.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு..!
- நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை வழக்கு .. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.. தமிழக அரசு கொடுத்த மனு.. முழு விபரம்..!
- "எல்லா பொண்ணுங்களும்"... கருக்கலைப்பு விஷயத்தில்.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு!!
- "அந்த உரிமை பெத்த அம்மாவுக்கு மட்டும் தான் உண்டு".. பரபரப்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு..!
- தவறாக போடப்பட்ட ஊசி.. 22 வருசத்துக்கு அப்புறம் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு..
- மே 18-ல் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன்.. செய்தியாளர்களிடம் பேசிய முதல் வார்த்தை..
- "என் மனைவி பெண்ணே கிடையாது".. உச்ச நீதிமன்றத்தில் கணவர் கொடுத்த வித்தியாசமான விவாகரத்து மனு..!
- “பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணமும் இல்லாம இதை வழங்க வேண்டும்!” - உச்ச நீதிமன்றம் அதிரடி..!
- மாத சம்பளம் வாங்குவோருக்கு குட்நியூஸ்.. ரூ.9000 வரை பென்சன் உயரலாம்.. முழு விவரம் இதோ!