'பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை...' 'அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அன்ஃபாலோவ் செய்தது...' காரணம் கேட்டு வினா...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமெரிக்காவின் வெள்ளை மளிகை ட்விட்டர் கணக்கு சமீபத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, இந்திய பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கங்களை அன்பாலோவ் செய்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவின் வெள்ளை மளிகையின் ட்விட்டர் பக்கத்தை சுமார் 21 மில்லியன் மக்கள் தொடர்ந்து வருகின்றனர். அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸிற்கு மருந்தாக ஹைட்ராக்சில் குளோரோபில் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்ததால், இந்தியப்பிரதமரையும் இந்தியாவையும் ட்விட்டரில் வாழ்த்தி புகழாரம் சூட்டினார். மேலும் அமெரிக்க வெள்ளை மளிகை ட்விட்டரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்ந்தது.

இது இந்தியா, அமெரிக்கா இடையே நட்புறவு அதிகரித்ததன் அடையாளமாக பார்க்கப்பட்ட நிலையில், அந்த பக்கங்களை வெள்ளை மாளிகை அன் பாலோ செய்துள்ளது.

இதேபோல் அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அலுவலக ட்விட்டர் பக்கத்தை அன் பாலோ செய்துள்ளது வெள்ளை மாளிகை. மேலும் வெள்ளை மாளிகையின் ட்விட்டர் பக்கத்தை அமெரிக்க அதிபர் மாளிகை அதிகாரிகள் கையாண்டு வருவதால் இப்படி நிகழ்ந்திருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாரத பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமர் மோடியை வெள்ளை மாளிகை அன் பாலோ செய்ததற்கான காரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்