ரூ. 1000 லஞ்சம் கொடுக்காததால் ஆத்திரம்... குழந்தைகளை 'கொள்ளுத் தாத்தாவாக்கிய' விநோதம்... 'வி.ஏ.ஓ.' செய்த மனசாட்சி இல்லாத செயல்...
முகப்பு > செய்திகள் > இந்தியா1000 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால், ஆத்திரம்அடைந்த, வி.ஏ.ஓ., குழந்தைகளின் வயது 102 மற்றும் 104 எனக் குறிப்பிட்டு பிறப்பு சான்றிதழ் வழங்கிய விநோத சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றள்ளது.
உத்தர பிரதேசத்தில், பரேலி மாவட்டம் பேலா கிராமத்தை சேர்ந்த பவன் குமார் என்பவர், தன் மகன்கள், சுப், மற்றும் சங்கெட் ஆகிய இருவருக்கும் பிறப்பு சான்றிதழ் கேட்டு, இரு மாதங்களுக்கு முன், இணையத்தில் விண்ணப்பித்தார்.
இருவருக்கும் பிறப்பு சான்றிதழ் வழங்க, வி.ஏ.ஓ., சுஷில் சந்த் அக்னிஹோத்ரி, கிராமத் தலைவர் பிரவீன் மிஸ்ரா ஆகியோர், பவன்குமாரிடம், 1000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க பவன்குமார் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த, வி.ஏ.ஓ.,வும் கிராம தலைவரும், குழந்தைகளின் பிறந்த வருடத்தை, தங்கள் விருப்பத்திற்கு மாற்றம் செய்து, பிறப்பு சான்றிதழ் அளித்து உள்ளனர்.
அவர்கள் அளித்துள்ள சான்றிதழில், பவன் குமாரின் மகன்களான, சுப்பின் பிறந்த தேதி, ஜனவரி, 6, 1918 என்றும், சங்கெட்டின் பிறந்த தேதி, ஜூன், 13, 1916 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர்கள் வழங்கிய பிறப்பு சான்றிதழ்களின் அடிப்படையில், குழந்தைகளின் தற்போதைய வயது, 104 மற்றும் 102 ஆகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பவன் குமார், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முடிவில், கோர்ட் உத்தரவின் கீழ், வி.ஏ.ஓ., மற்றும் கிராம தலைவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 10 நிமிஷத்துல 4 'குவார்ட்டர்' ... 'மது' குடிக்கும் போட்டியில்... வென்றவருக்கு 'நேர்ந்த' துயரம்!
- ‘குடும்பத்த காப்பாத்தணும்’.. ‘2 வருஷ கனவு'.. போலீஸ் உடற்தகுதி தேர்வில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
- “3வது பெண் குழந்தை.. பயத்துல”.. “கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!”.. “நடுங்க வைக்கும் சம்பவம்!”
- “உன் பொண்ண கூட்டிட்டு வா!”.. “60 நாள் கூட்டு பலாத்காரம், வீடியோ மிரட்டல்”.. கடைசியில் பெண் எடுத்த முடிவு!
- ‘பிறந்த’ குழந்தைக்கு... ‘ஆபரேஷன்’ தியேட்டருக்கு உள்ளேயே நடந்த ‘உறையவைக்கும்’ சம்பவம்... அலறித் ‘துடித்த’ தந்தை...
- ‘40 பேருடன்’ கிளம்பிய அரசுப் பேருந்து... ‘பனிமூட்டத்தில்’ முன்னே நின்ற ‘லாரி’.. ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘பயங்கரம்’...
- ‘50 பயணிகளுடன்’ கிளம்பிய பேருந்து... லாரியுடன் ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து... ‘நொடிப்பொழுதில்’ பற்றிய ‘தீயால்’ நேர்ந்த பயங்கரம்...
- நிர்பயா குற்றவாளிகளை 'தூக்கில்' போட நான் தயார்... '4 தலைமுறை' பணியாளர் ஒப்புதல்... 'சேவையாக' கருதுவதாக விளக்கம்...
- Video: 'ஸ்கூட்டரில்' சென்ற பிரியங்கா காந்தி... 'துரத்தி' சென்ற போலீசார்... கீழே பிடித்து 'தள்ளியதாக' குற்றச்சாட்டு!
- பிரதமர் மோடி 'தடுக்கி விழுந்த, அந்த ஒரு படிக்கட்டை மட்டும் இடிச்சு!'.. .. உ.பி.அரசின் 'அதிரடி' முடிவு!