'வீட்டில்' ஒருவருக்கு 'கொரோனா' தொற்று... 'குடும்பமே மருத்துவமனையில்...' வீட்டில் 'யாரும் இல்லாத' நிலையில்... நிகழ்ந்த 'அதிர்ச்சி சம்பவம்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்தவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் ஹிஜின் என்ற நகரின் சதர்கோட் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த நபரது குடும்பத்தினருக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் என அச்சம் எழுந்ததால் அவர்களும் தனிமைபடுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்தினருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையறிந்த திருடர்கள் நேற்று நள்ளிரவு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் என அனைத்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்த திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சையில் இருப்பவர்கள் வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

CORONA, KASHMIR, PATIENT, HOSPITAL, THIEF

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்