'இப்பதான் ஆரம்பிச்சிருக்கு...' 'நவம்பர்ல' தான் 'உச்சம்' தொடும்... ஐ.சி.எம்.ஆர். 'ஆய்வு' முடிவால் 'அதிர்ச்சி...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சம் தொடுவது எப்போது என்பது குறித்த ஆய்வுத்தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் எப்போது உச்சம் தொடும் என்பது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) செயல்பாட்டு ஆராய்ச்சி குழு ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 34 நாட்களில் உச்சம் தொடும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது 74 நாட்கள் ஆகும் என்ற நிலையை அடைந்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு என கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாகவே நோய்த் தொற்று மெதுவாக பரவுவதாகவும், அதன் காரணமாகவே நோய்த் தொற்று உச்சம் தொட நேரம் எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
ஊரடங்கு, நோய்த் தொற்று பாதிப்பை 97 சதவீதத்தில் இருந்து 69 சதவீதமாக குறைக்க உதவி உள்ளது. நோய்ப்பரவலின் தற்போதைய வேகத்தை கவனிக்கையில், நவம்பர் மாதம் மத்தியில்தான் உச்சம் தொடும் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஊரடங்கின் காரணமாக சுகாதார உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான அவகாசம் கிடைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொற்று நோய்க்கான மாதிரி அடிப்படையிலான இந்த ஆய்வின்படி, ஊரடங்கு காலத்தில் நோயாளிகளை பரிசோதித்தல், தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்காக கட்டமைக்கப்பட்ட கூடுதல் திறனுடன், உச்ச பாதிப்பு அளவை 70 சதவீதம் குறைத்து, ஒட்டுமொத்த பாதிப்பை 27 சதவீத அளவுக்கு குறைக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நவம்பர் மத்தியில்தான் உச்சம் பெறும் என்று இந்த ஆய்வில் தெரிய வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரே நாளில் அசுர வேட்டை நிகழ்த்திய கொடூர கொரோனா!.. தமிழகத்தில் இன்று மட்டும் 38 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே
- ஈ.சி.ஜி, 'ரெம்டெசிவிர்'.... கொரோனா சிகிக்சைக்கான... 'புதிய' நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை!
- "1 வாரத்தில் 20 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யணும்!".. அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி!.. என்ன நடக்கிறது டெல்லியில்?
- "ஹாஸ்பிட்டல் பில் பார்த்ததும் ஒரு நிமிஷம் என் உடம்பெல்லாம் ஆடிபோயிடுச்சு!".. கொரோனா சிகிக்சை பெற்ற நோயாளியை... தலைசுற்ற வைத்த கட்டணம்!
- 105 பேருக்குமே 'நெகட்டிவ்'... அப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு... 'நம்பிக்கை' தரும் மாவட்டம்!
- “வெண்டிலேட்டரே தேவையில்ல.. 2 மாசத்துக்குள்ள உலகெங்கும் கிடைக்கும்!”.. 'கொரோனாவை' எதிர்கொள்ள 'புதிய மருந்து'!.. 'ஆஸ்திரேலிய' அறிஞர்கள் 'சாதனை'!
- "புதிய வகை வைரஸ் பரவுகிறதா?..." சீனாவில் ‘போர்க்கால எமர்ஜென்சி’ அமல்... 'கோவிட்-19' அறிகுறிகள் 'தென்படாததால் அதிர்ச்சி...'
- 'கொரோனாவை விரட்டும் மூலிகை டீ...' 'இந்த மாவட்டத்துல நெறைய பேர் குணம் ஆயிட்டு வராங்க...' ஆங்கில மருத்துவ சிகிச்சையோடு மூலிகை டீ குடிக்கிறப்போ நல்ல பலன்...!
- பிரபல 'கிரிக்கெட்' வீரருக்கு 'கொரோனா...' 'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்...' 'ட்விட்டர்' பதிவில் 'உருக்கம்...'
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...'