தொழிலாளியிடம் வழிப்பறி செய்த திருடர்களை விரட்டிப்பிடித்த நிஜ துரைசிங்கம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகா மாநிலத்தில் மங்களூருவில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை சிங்கம் பட பாணியில் போலீஸ் அதிகாரி ஒருவர் துரத்திப் பிடித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

 கொள்ளை

கர்நாடகா மாநிலம் மங்களூரில் அமைந்துள்ளது நேரு மைதானம். விளையாட்டுப் பிரியர்கள், வேடிக்கை பிரியர்கள், நடைப் பயிற்சியில் ஈடுபடுவோர் என எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த மைதானத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை காவல்துறை அதிகாரியான வருண் என்பவர் ஓடிச்சென்று மடக்கிப் பிடித்திருக்கிறார்.

மங்களூருவில் பணிபுரிந்துவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் இன்று மதியம் நேரு மைதானத்திற்கு வந்திருக்கிறார். அப்போது, அவரை நெருங்கிய 3 கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்ட காத்திருந்திருக்கின்றனர். கூலித் தொழிலாளி சற்றே கண் அயர்ந்த நேரத்தில் அவரிடமிருந்த செல்போன் மற்றும் பர்ஸை திருடிவிட்டு அங்கிருந்து ஓடியிருக்கிறார்கள் 3 கொள்ளையர்களும்.

மாசாக எண்ட்ரியான சிங்கம்

அப்போது அருகிலிருந்தவர்கள் குரல் எழுப்பவே அந்த வழியாக சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரியான வருண், உடனடியாக ஜீப்பை நிறுத்துமாறு தனது டிரைவருக்கு கட்டளையிட்டிருக்கிறார். அங்கிருந்த மக்களிடம் விஷயத்தை அறிந்த உடனேயே கொள்ளையர்களை ரன்னிங்கில் சேஸ்  செய்ய ஆரம்பித்திருக்கிறார் வருண்.

ஆளுக்கொரு பக்கமாக கொள்ளையர்கள் பிரிந்து ஓடினாலும் ஒருவனை மடக்கிப் பிடித்திருக்கிறார் காவல்துறை அதிகாரி வருண். அதன்பின்னர் கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில் அவன், நீர்மார்க்கம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் பூஜாரி என்பதும் அவனுக்கு 32 வயது என்பதும் தெரியவந்திருக்கிறது.

மற்ற 2 பேருக்கும் போட்ட ஸ்கெட்ச்

பிடிபட்ட ஹரிஷ் பூஜாரி மூலமாக மற்றொரு கொள்ளையனைப் பிடிக்க திட்டம் வகுத்திருக்கிறார் இந்த கறார் போலீஸ் ஆபிசர். அந்தத் திட்டமும் பலனளிக்கவே, தப்பித்துச் சென்ற சமந்த் என்னும் 20 வயது இளைஞர் சமத்தாக காவல்துறையிடம் அகப்பட்டார். கொள்ளையில் ஈடுபட்ட மூன்றாவது நபரான ராஜேஷ் இன்னும் காவல்துறையிடம் சிக்கவில்லை. ஆனாலும், ராஜேஷை கண்டுபிடிக்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.

10 ஆயிரம் பரிசு

பொதுமக்களிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை அதிரடியாக விரட்டிப்பிடித்த காவல்துறை அதிகாரி வருண் அவர்களுக்கு மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் 10 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டியுள்ளார்.

POLICE, கர்நாடகா, மங்களூரு, போலீஸ், POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்